India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராவிடம் விடுபட்ட விவகாரத்தில் ஆளுநர் ரவி மீது ஸ்டாலின் வன்மம் கக்குவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாடியுள்ளார். டிவி சேனலுக்கு தமிழ் பெயரில்லாதிருந்தபோது டிடி தமிழ் என்று பெயர் வைத்து மத்திய அரசு புகழ் சேர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். யாரும் செய்யாததை தமிழுக்கு செய்தவர் பிரதமர் மோடி. அதேபோல் ஆளுநரும் தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப முயற்சி செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.
2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதையடுத்து, ஹமாசுக்கு ஆதரவாக ராக்கெட்டுகளை வீசிய லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள், ஈராக், சிரியா நாடுகளில் உள்ள போராளிக் குழுக்கள், ஏமனில் உள்ள ஹவுதி போராளி குழுவையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல், சைபர் தாக்குதலையும் சந்தித்து வருகிறது. இஸ்ரேலால் மட்டுமே இது சாத்தியம்.
▶அக். 19 (ஐப்பசி 2) ▶சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: த்ரிதியை ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: பரணி ▶சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம். SHARE பண்ணுங்க.
லக்கி பாஸ்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். நடிகை மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வரும் அக். 21இல் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அக்.31இல் தீபாவளியன்று வெளியாகிறது.
போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிபந்தனை விதித்துள்ளார். ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டது குறித்து பேட்டியளித்த நெதன்யாகு, சின்வார் கொல்லப்பட்டதுடன் போர் முடிந்து விடவில்லை என்றும், இதுவொரு தொடக்கத்தின் முடிவுதான் என்றும் கூறினார். போரை நாளையே நிறுத்த முடியும், ஆனால் அதற்கு ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு வரி புறக்கணிக்கப்பட்டதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக மக்களிடம் ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வன்மம் கொண்ட செயல் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இரவில் சிலர் தூக்கமின்றி தவிப்பர். அவர்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும் என உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றை தெரிந்து கொள்வோம். * தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு செல்போன், டிவியை ஒதுக்கிவிட வேண்டும் *தூங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ஒரு குளியல் பாேடலாம் *3 மணி நேரத்திற்கு முன்பே காபி, மதுபானத்தை தவிர்க்க வேண்டும் *படுக்கை அறையை இருட்டாக்க வேண்டும்.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஆண்டில் அதிகபட்ச (102) சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 29 மற்றும் ஷுப்மன் கில் 16 சிக்ஸர்களை அடித்துள்ளனர். முன்னதாக, ஒரு ஆண்டில் (2022) இங்கிலாந்து அணி அடித்த 89 சிக்ஸர்களே அதிகபட்சமாக இருந்தது. இந்த பட்டியலில் 87 சிக்ஸர்களுடன் இந்திய அணியே 3ஆம் இடத்திலும் இருக்கிறது.
பிரிக்ஸ் யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரிக்ஸ் அமைப்பு மேலை நாடுகளுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய பிரதமர் மோடி பலமுறை தெரிவித்துள்ளதாக கூறினார். ரஷ்யா-அமெரிக்கா உறவில் விரிசல் உருவானதற்கு அமெரிக்காவே காரணம் என்றும், அமெரிக்காவின் நட்பு நாடுகளே டாலரை இருப்பு வைப்பதை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க, இந்திய அணி தங்களது நாட்டிற்கு வர வேண்டும் என பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பாக். செல்வதற்கு இந்திய அணி தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்திய அணி டெல்லி அல்லது சண்டிகருக்கு திரும்ப ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், BCCI-க்கு PCB கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.