India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகிலேயே சென்னையில்தான் அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்கடுத்து ஹைதராபாத்தில் 480 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் 289 சிசிடிவி கேமராக்களே உள்ளதாகவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
தியாகம் குறித்து துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருப்பதாக இபிஎஸ்சை ஓபிஎஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், இதன்மூலம் CM பதவிக்கு பரிந்துரைத்தவர், அமர்த்தியவர், அப்பதவியில் தொடர் துணை புரிந்தவர்களை முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது என இபிஎஸ்சை அவர் சாடியுள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை விரைவில் இயக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அமரன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவீர்களா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அதுகுறித்து நீண்ட நாள்களாக பேசிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும் கூறினார்.
ரயிலில் என்ஜீனுக்கு அடுத்து முதலிலும், கடைசியாகவும் பொதுப் பெட்டி இருக்கும். இது ஏன் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பொதுப் பெட்டியில் பயணிகள் அதிகம் பயணிப்பர் என்பதால் அது எடை அதிகமாக இருக்கக்கூடும். ஆதலால் அது முதலிலும், கடைசியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக அப்பெட்டியை நடுவில் வைத்தால், எடை அதிகம் இருக்கும் காரணத்தால் சரிந்துவிடும் எனவும் ரயில்வே கூறியுள்ளது.
இன்று (அக்.19) காலை 7 மணி வரை 21 மாவட்டங்களில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, குமரியில் மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா, அமெரிக்க கிளையில் பணிபுரிந்த 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு காரணம், உணவு கூப்பன்களை பயன்படுத்தி அவர்கள் ரூ.2,100-க்கு டூத்பேஸ்ட், டிடர்ஜென்ட் வாங்கியதே ஆகும். மேலும் சில ஊழியர்கள், அலுவலக உணவை பார்சல் கட்டி எடுத்து சென்றதையும் மேட்டா கண்டுபிடித்துள்ளது. இதுபோல 24 பேர், 4 லட்சம் டாலர்களை மோசடி செய்ததை கண்டுபிடித்ததால் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்திய அணி போராட்ட திறன் கொண்டதென மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் முதலில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி தற்போது வீரு கொண்டது போல ஆடுகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மஞ்ச்ரேக்கர், இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல என்றும், தாம் நியூசிலாந்து வீரராக இருந்திருந்தால் இந்திய அணியை கண்டு பீதியடைந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
வேட்டையன் படத்தின் 2ஆவது பாகத்தை எடுக்க இயக்குநர் ஞானவேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அப்பட இயக்குநர் ஞானவேல், முதல் பாகத்தின் முந்தைய கதையை வைத்து 2ஆவது பாகம் எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்கள்.
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி,
லிட்டருக்கு ₹11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கிரீன் மேஜிக் பால் லிட்டர் ₹44க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ₹50 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் சாடியுள்ளார். பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவன முயற்சி கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் IMD கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு காணலாம். நாளை: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை. நாளை மறுநாள்: வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை.
Sorry, no posts matched your criteria.