India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுவர்கள் தனது ஸ்டைலில் பவுலிங் போட முயற்சிப்பதை பார்க்க நேரிடுவதாக பும்ரா தெரிவித்துள்ளார். தான் ஒரு போதும் அதை ஆதரிக்க மாட்டேன் எனவும், ஒவ்வொருவருக்கும் தனி ஸ்டைல் இருக்கும், அதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். மேலும், ஒருவரைப் பார்த்து உத்வேகம் அடையும் போது அவரது ஸ்டைலை ஃபாலோவ் பண்ணுவது இயல்புதான் எனவும், ஆனால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
▶ செப்.21 (புரட்டாசி 5) ▶ சனி ▶ நல்ல நேரம்: 7:45 – 8:45AM & 3:15 – 4:15PM ▶ கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 9:30 – 10:30PM ▶ ராகு காலம்: 9:00 – 10:30AM ▶ எமகண்டம்: 1:30 – 3:00PM ▶ குளிகை: 6:00AM – 7:30AM ▶ திதி: சதுர்த்தி ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: அசுவினி காலை 8.03 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ யோகம்: சித்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: உத்திரம்
மெசேஜ் சொல்கிற படம் தனக்கு செட் ஆகாது என ஞானவேலிடம் கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கமர்ஷியலான கதையை கேட்டதாகக் கூறினார். 10 நாள்கள் டைம் கேட்டு, 2 நாளிலேயே கால் செய்த அவர் கமர்ஷியல் படம் இயக்க ஒப்புக்கொண்டதாக கூறிய ரஜினி, நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாமல் ரசிகர்கள் உங்களைப் பார்க்கிற வேறொரு கண்ணோட்டத்தை காட்டுவதாக சொன்னார் என்றார்.
இன்று (செப். 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக கோயில்களுக்கு அம்மாநில அறநிலையத்துறை முக்கிய உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 1,80,000 கோயில்கள் உள்ள நிலையில் அறநிலையத்துறையின் கீழ் 35,500 கோயில்கள் உள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இளம் வயதிலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். விளையாடிய முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (1,094) எடுத்த 4வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இன்று வங்கதேசத்திற்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் (1,446), எவர்டன் வீக்ஸ் (1,125) ஜார்ஜ் ஹெட்லி (1,102) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
*மேஷம் – பொறுமை தேவை *ரிஷபம் – செல்வம் கொட்டும் *மிதுனம் – சினத்துடன் இருப்பீர் *கடகம் – உற்சாகமான நாளாக இருக்கும் *சிம்மம் – பாராட்டு கிடைக்கும் *கன்னி – நன்மை உண்டாகும் *துலாம் – இரக்கத்துடன் செயல்படுங்கள் *விருச்சிகம் – ஊக்கமான நாளாக அமையும் *தனுசு – மகிழ்ச்சி உண்டாகும் *மகரம் – கடுமையாக உழைக்க வேண்டும் *கும்பம் – உற்சாகத்துடன் செயல்படுங்கள் *மீனம் – அமைதியான நாளாக அமையும்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் டிஜிட்டல் உரிமம் ₹149.7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் உரிமம் விற்பனையில் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத ரெக்கார்டை இந்த படம் செய்துள்ளது. ‘நாயகன்’ படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் புகார் அளித்துள்ளார். ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி, சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.