news

News October 20, 2024

₹6,100 கோடி திட்டங்கள்: மோடி தொடங்கி வைக்கிறார்

image

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி நாளை ₹6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு மோடி நாளை செல்கிறார். அப்போது அவர், பல்வேறு விமான நிலையம் தொடர்பான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். புதிய கண் மருத்துவமனை, சார்நாத் சுற்றுலா மேம்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

News October 20, 2024

பால் குடிப்பவரா நீங்கள்? இதை படிங்க

image

பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். 1) பாலில் கால்சியம், வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்பு வலுப்படும் 2) உயர்தர புரொட்டின், அமினோ ஆசிட்ஸ் இருப்பதால் தசைகள் வேகமாக வளரும், தசைகளில் பிரச்னை இருப்பின் சரியாகும் 3) பாலில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதை குடிப்பது இதய நலனை மேம்படுத்தும் 4) பாலில் இருக்கும் லைனோசிட் ஆசிட் உடல் எடையை பராமரிக்க உதவும்.

News October 20, 2024

JUST NOW: இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை

image

19 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, வேலூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, திருவாரூரில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 20, 2024

இந்தி திணிப்பு தமிழகத்தில் நடக்காது: துரை வைகோ

image

மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியை திணிப்பதற்கான ஒரு முயற்சியே என துரை வைகோ கூறியுள்ளார். இந்தி மொழிக்கு தமிழர்கள் எதிரானவர்கள் கிடையாது என்றும், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை, இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் தமிழர்கள் ஆளுமைகளாக இருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 20, 2024

மீண்டும் Lover Boy ஆகும் சிம்பு..!

image

இளைஞர்களை கவரும் வகையில் தன்னுடைய அடுத்த படம் இருக்கும் என சிம்பு தெரிவித்துள்ளார். தம்+ மன்மதன்+ வல்லவன்+ VTV ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அந்தப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

News October 20, 2024

குழந்தைகள் மத்தியில் புது வியாதி: VP

image

குழந்தைகள் மத்தியில் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற புது வியாதி வந்துள்ளதாக துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கல்வி வணிகமாக மாறுவது தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை ‘கேம் சேஞ்சர்’ எனவும் பாராட்டியுள்ளார்.

News October 20, 2024

‘நந்தன்’ படத்தை பாராட்டிய அண்ணாமலை

image

‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என அண்ணாமலை பாராட்டியுள்ளார். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளை இப்படம் தோலுரித்து காட்டியுள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள சசிகுமார், இயக்குநர் சரவணனுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

News October 20, 2024

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

image

Emerging ஆசிய கோப்பை தொடரில் பாக். அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 44 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாக். அணி கடைசி வரை போராடியது. இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

News October 20, 2024

ராசி பலன்கள் (20-10-2024)

image

◙மேஷம் – ஜெயம்
◙ரிஷபம் – வரவு
◙மிதுனம் – சோர்வு
◙கடகம் – பயம்
◙சிம்மம் – உழைப்பு
◙கன்னி – களிப்பு
◙துலாம் – நன்மை
◙விருச்சிகம் – சாதனை
◙துனுசு – லாபம் ◙மகரம் – அச்சம்
◙கும்பம் – ஆர்வம் ◙மீனம் – யோகம்

News October 20, 2024

‘வேட்டையன்’ Loss.. ரஜினி இழப்பீடு?

image

‘வேட்டையன்’ எதிர்பார்த்த வசூலைக் குவிக்காததால், அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு இழப்பீடாக அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும்படியும், சம்பளத்தை குறைத்து கொள்ளும்படியும் ரஜினியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் ரஜினி நடித்த தர்பார், 2.0, லால் சலாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை.

error: Content is protected !!