news

News October 20, 2024

அரண்மனை-5.. சூட்டிங்கிற்கு தயாராகும் சுந்தர் சி

image

அரண்மனை 5ஆவது பாக படப்பிடிப்பை விரைவில் சுந்தர் சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தின் முதல் 4 பாகங்களுக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, அரண்மனை-4 வசூலை குவித்தது. இதையடுத்து அரண்மனை 5ஆவது பாக படத்திற்கான பணியில் சுந்தர் சி ஈடுபட்டு இருப்பதாகவும், நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் சூட்டிங்கை அவர் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

News October 20, 2024

உடனே விண்ணப்பிங்க: ONGCஇல் 2,236 வேலைவாய்ப்பு

image

ONGCஇல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அக்கவுண்ட் எக்ஸ்யூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு, வயது வரம்பாக 24 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும்.

News October 20, 2024

23 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. * இடி-மின்னலுடன் மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி *லேசான மழை: ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள். SHARE IT.

News October 20, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 20, 2024

ஹாஸ்பிட்டலில் SM கிருஷ்ணா அனுமதி

image

கர்நாடக முன்னாள் CM, முன்னாள் வெளியுறவு அமைச்சர் SM கிருஷ்ணா ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு தனியார் ஹாஸ்பிட்டலில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதால் திங்கள்கிழமை வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது. ஏற்கெனவே 2 முறை ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

News October 20, 2024

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்?

image

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக இடைக்கால அரசின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். மாணவர் போராட்டத்தை அடுத்து, வங்கதேசத்தை விட்டு வெளியேறிய சேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கும் வரையிலான காலத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

அண்ணாமலைக்கு சசிகுமார் நன்றி

image

நந்தன் படத்தை பாராட்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அப்படத்தில் கதாநாயகன் சசிகுமார் நன்றி கூறியுள்ளார். “பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி ‘நந்தன்’ படத்தைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்” என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நந்தன் படம் மக்கள் மனதில் காலத்திற்கும் இடம் பெறும் என அண்ணாமலை பாராட்டியிருந்தார்.

News October 20, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 20 (ஐப்பசி 3) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM▶குளிகை: 3:00 PM – 4:30 PM▶ திதி: சதுர்த்தி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: கார்த்திகை ▶சந்திராஷ்டமம்: சித்திரை, ஹஸ்தம். SHARE பண்ணுங்க.

News October 20, 2024

போருக்கு தயாராகும் சீனா..!

image

போருக்கு தயாராக இருக்கும்படி சீன ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். வீரர்கள் வலிமையுடன் களமாட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தைவானை தனது நாடு என சொந்தம் கொண்டாடும் சீனா, சமீப காலமாகவே அந்நாட்டுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நீடிக்கும் நிலையில், சீன அதிபரின் உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 20, 2024

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு HAPPY NEWS

image

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதம் தலா ₹1500 என 2 ஆண்டுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கு இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.

error: Content is protected !!