India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்கள் இவ்வளவு விஸ்வாசமானவர்களா என ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகியுள்ளது. Capital Hair and Beauty என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 75% ஆண்கள் தங்கள் துணையைவிட பார்பருக்கு அதிக விஸ்வாசமாக இருக்கிறார்களாம். காதலியை ஏமாற்றுவதைவிட பார்பரை ஏமாற்றுவதுதான் அதிக குற்ற உணர்ச்சியை கொடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி உங்க கருத்து என்ன?
தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
சரக்கொன்றை மலர் பற்றி தெரியுமா? அதன் பூ, இலை, மரப்பட்டை கூட மருத்துவ குணம் கொண்டது. பூ, இளங்கொழுந்தை துவையல் வைத்து சாப்பிடலாம், கஷாயமாக குடிக்கலாம். நீரிழிவு, மேக நோய் போன்றவை சரியாகும். சிவனின் பூஜைக்குரியதாகவும் கருதப்படும் கொன்றை மலர்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் சித்திரை மாதத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும். இதனால், சித்திரைப் பூ என்ற பெயரும் இதற்கு இருக்கிறது.
<<16073818>>அனுபமா – துருவ் விக்ரம்<<>> காதலிப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த செய்தி வெளியான 2-3 நாள்களாக ட்ரெண்டிங்கில் செய்தி இருந்து வருகிறது. இருவருமே இது குறித்து வாய் திறக்காதது தான் இதில் ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் டவுட்டை கொடுத்துள்ளது. நெட்டிசன்கள், ‘அட என்ன விஷயமுனு சொல்லுங்களேன் ப்ளீஸ் என ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஒருவேள இருக்குமோ!
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று (ஏப்.15) சவரனுக்கு ₹280 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,720-க்கும், சவரன் ₹69,760-க்கும் விற்பனையாகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று சவரனுக்கு ₹120 குறைந்து சவரன் ₹70,040-க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
ஈக்வடார் அதிபராக டேனியல் நோபோவா மீண்டும் பதவியேற்க உள்ளார். ஏப். 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அதிபர் டேனியல் நோபோவாவின் கட்சி 56% வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரி தலைவர் லூயிசா கோன்சலஸை அவர் தோற்கடித்துள்ளார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈக்வடாரில்தான் சர்ச்சை சாமியார் நித்தியானாந்தா இருப்பதாக சொல்லப்படுகிறது.
டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். 6 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டிருப்பதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தக்காளி விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
PM மோடிக்கு தமிழ் மீது தீவிர பற்றுள்ளதாக தொடர்ந்து பாஜகவினர் அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். ஆனால், அவரின் தமிழ் பதிவில், எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சிக்கின்றனர். விஜயகாந்த் குறித்த PM-ன் சமீபத்திய பதிவில், ‘கூர்கிறார்கள்’ (கூறுகிறார்கள்) என பதிவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ‘அட்மின் சார்.. PM போஸ்ட்ல கொஞ்சம் கரெக்ட்டா டைப் பண்ணுங்க’ என விமர்சித்து வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான <<16103601>>S.S.ஸ்டான்லி<<>> மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் மூணாறில் பிறந்த ஸ்டான்லி, கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 4 படங்களை இயக்கியுள்ள இவர், பெரியார், ராவணன், சர்க்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை குடித்தது. அத்தோடு நிற்கவில்லை. சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், பிஜி தீவு என ஆசிய கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் அண்மை காலமாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.39 மணியளவில் நேபாளத்திலும் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்துக்கு என்னதான் ஆச்சு?
Sorry, no posts matched your criteria.