news

News October 21, 2024

மாலத்தீவில் அறிமுகமாகிறது UPI வசதி

image

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அந்நாட்டில் UPI வசதியை அறிமுகப்படுத்த உள்ளார். இது குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கி புதிய கூட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் அதிபர் முய்சு இந்தியா வந்தபோது, மாலத்தீவில் UPI வசதியை நடைமுறைப்படுத்த நமது அரசு உதவுவதாக உறுதியளித்தது.

News October 21, 2024

ஸ்ரேயா கோஷலின் போராட்ட பாடல்

image

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் போராட்டத்தில், பிண்ணனி பாடகி ஸ்ரேயா கோஷல் இணைந்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதை கண்டித்து புதிய பாடலை அவர் பாடினார். பாடலின் ஆழமான அர்த்தத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். TMC நிர்வாகி குணால் கோஷ் இதை வரவேற்றுள்ளார்.

News October 21, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 73 ▶குறள்: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. ▶பொருள்: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

News October 21, 2024

தோனிக்கு ₹4 கோடி.. ருதுராஜ், ஜடேஜாவுக்கு ₹18 கோடியா..?

image

ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜாவுக்கு ₹18 கோடி ஒப்பந்தம் கொடுத்து CSK நிர்வாகம் ரீடெய்ன் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பதிரானா ₹14, ஷிவம் துபே ₹11 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தோனியை ₹4 கோடிக்கு ரீடெய்ன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தோனி இதுவரை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

News October 21, 2024

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலகிற்கு பாடம்: ரோமர்

image

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் ரோமர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பயனடைந்ததாகவும், இது மற்ற நாடுகளை விட வேறுபட்ட முயற்சி எனவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் இந்த வெற்றி தனித்துவம் வாய்ந்தது எனவும், புது Benchmark-ஐ செட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News October 21, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் – 21 ▶ஐப்பசி – 04 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 01:45 AM – 02:45 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:00 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ சந்திராஷ்டமம்: சுவாதி ▶ நட்சத்திரம் : ரோகிணி.

News October 21, 2024

கோக், பெப்சியுடன் சண்டைக்கு தயாரான அம்பானி..!

image

ரிலையன்ஸ் குழுமத்தின் குளிர்பான பிராண்டான ‘Campa Cola’-வை மீண்டும் சந்தைக்கு கொண்டு வர முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார். 70, 80-களில் இந்த பிராண்ட் பிரபலமாக இருந்தது. அம்பானியின் முடிவால் இந்திய குளிர்பான சந்தையில் கோலோச்சும் கோக், பெப்சியின் விற்பனை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய பிராண்டுகளை காட்டிலும், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

News October 21, 2024

சேர்ந்து வாழப் போகும் தனுஷ் – ஐஸ்வர்யா?

image

ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்தை திரும்பப் பெற போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் விவாகரத்து வழக்கு கடந்த 7, 19ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. மேலும், நவ.2ஆம் தேதி நடக்கப்போகும் விசாரணைக்கும் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

News October 21, 2024

மோடியை இறைவன் இயக்குகிறார்: சங்கராச்சாரியார்

image

இறையருளால் மோடி போன்ற நல்ல தலைவர்கள் உள்ளதாக காஞ்சி சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்துள்ளார். PM மோடியின் வாரணாசி தொகுதியில் இன்று சங்கரா கண் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அவர், PM மோடி மூலம் இறைவன் பல்வேறு மகத்தான செயல்களை செய்வதாகக் குறிப்பிட்டார். மேலும், சாமானியன் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்பவர்தான் மோடி என புகாழாரம் சூட்டினார்.

News October 21, 2024

தினமும் $1 மில்லியன் பரிசு

image

தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு, USA அதிபர் தேர்தல் நடக்கும் வரை தினமும் $1 மில்லியன் பரிசு வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தனது America PAC வலைதளத்தில், USA அரசியலமைப்பின் சாரமான பேச்சு சுதந்திரம், ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட மனுவை அவர் வெளியிட்டுள்ளார். டிரம்ப் ஆதரவாளரான மஸ்க், சட்டவிரோதமாக பண ஆசைகாட்டி வாக்காளர்களை கவர முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!