India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சியினரை யாராலும் அச்சுறுத்த முடியாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் RSS உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர்களின் நாக்கை வெட்டுவதாக பேசிவருகின்றனர் எனவும், அவர்களுக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் கார்கே கூறியுள்ளார். மேலும், இப்படி வன்முறை பேச்சை பேசுபவர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர்’ என்று பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மனந்திறந்து பாராட்டியுள்ளார். ‘வேட்டையன்’ பாடல் வெளியிட்டு விழாவில் ஒளிப்பரப்பட்ட காணொலியில், “1991ஆம் ஆண்டு ‘ஹம்’ படத்தில் என் தம்பியாக ரஜினி நடித்துள்ளார். ஓய்வு நேரத்தின்போது,
செட்டின் தரையில் படுத்துக் கொள்வார் என்று பகிர்ந்து கொண்டார். அவர் எளிமையானவர்” எனக் கூறியுள்ளார்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலைக்கு நீதிக்கேட்டு, 42 நாள்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். முதல் கட்டமாக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை & சேவைகளை வழங்க இன்று பணியில் இணைந்துள்ளனர். அதே நேரம், அவர்கள் OP பிரிவுப் பணியை தொடர்ந்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்னியில் உள்ள நச்சுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்: ஒரு ஸ்பூன் தனியாவை லேசாக இடித்து, ஒரு கிளாஸ் நீரில் போட்டு 2 மணிநேரம் ஊற விடுங்கள். பிறகு, அதை மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, ஒரு ஸ்பூன் சீரகத்தை அதில் சேருங்கள். பிறகு, தோலோடு சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சை பழத்தை அதில் போடுங்கள். 2 நிமிடங்கள் கழித்து அதை இறக்கி மிதமான சூட்டில் குடியுங்கள். எந்த நேரமானாலும் இதை குடிக்கலாம்.
பெண்கள் திருமணத்திற்கு ₹25,000 (பட்டதாரி அல்லாதோர்) முதல் ₹50,000 (பட்டதாரி) வரை உதவித் தொகை, 8 கிராம் தங்கத்தை தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் பெயர், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகும். இதில் பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு, குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லை. இதற்கு திருமணத்திற்கு 40 நாள்களுக்கு முன்பு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT
கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘தக் லைஃப்’படம் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இசைவெளியீட்டு விழா நடைபெறும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் உலக செஸ் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை FIDE திரும்பப்பெற கூடாதென உலகின் No 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் வலியுறுத்தியுள்ளார். புடாபெஸ்டில் நடந்த விழாவில் மிகச்சிறந்த சதுரங்க வீரருக்கான விருதை பெற்ற அவர், “இந்த விருதைப் பெற என்னை விட ரஷ்ய செஸ் கிராண்ட்மாஸ்டர் கேரி காஸ்பரோவ்தான் தகுதியானவர்” என்றார். உக்ரைன் போருக்கு எதிராக கேரி குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று 10 மணிக்கு<<14154831>> GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) 1000 கிலோ (அ) 220.46 பவுண்டு 2) தோல் 3) பிலிப் பினெல் 4) ஜப்பான் 5) ஆபேரி ராகம் 6) பாந்தெரா லியோ 7) Ribonucleic Acid இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் தொழிலதிபர் ரின்சன் ஜோஸுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன. வயநாட்டைச் சேர்ந்த ஜோஸ், நார்வே குடியுரிமை பெற்றவராவார். பல்கேரியாவை மையமாக கொண்டு இயங்கும் அவரது நோர்டா குளோபல் நிறுவனம்தான், ஹிஸ்புல்லா அமைப்புக்கு புதிய வகை பேஜர்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. பேஜர்கள் வெடிப்பு நடந்த நாள்முதல் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
TN இதுவரை 9 முறை சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது. 1952, 57, 62, 67, 71 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டிற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற்றது. 1977, 80இல் தனித்தனியாக தேர்தல் நடந்தது. 1984, 89, 91, 96 மீண்டும் ஒன்றாக தேர்தல் நடைபெற்றது. 1996க்கு பிறகு கடந்த 28 வருடங்களாக சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.