news

News October 21, 2024

AIR India பயணிகளுக்கு காலிஸ்தான் எச்சரிக்கை!

image

பயணிகள் யாரும் ஏர் இந்தியாவில் நவ.1-19ம் தேதி வரை பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னு தெரிவித்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு விழா குறிப்பிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட உள்ளதால், ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்தாண்டும் அவர் இதேபோல் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

News October 21, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இந்தோனேசியாவின் 8ஆவது அதிபராக சுபியாண்டோ (73) பதவியேற்றார். ➤வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் உயிரிழந்தனர். ➤மில்டன் சூறாவளி காரணமாக கியூபாவின் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. ➤ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா கோரிக்கை. ➤சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் படையை அந்நாட்டு அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.

News October 21, 2024

ஆண்கள் 6 முறை; பெண்கள் எத்தனை முறை தெரியுமா?

image

ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 12,500 வார்த்தைகளும், பெண் 22,000 வார்த்தைகளும் பேசுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பெண் சராசரியாக ஒரு நாளைக்கு 4 பொய்கள், 60 வயதிற்குள் 87,600 பொய்கள் சொல்கிறார். பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 30-64 முறை அழுகிறார்கள்; ஆண்கள் 6- 17 முறை அழுகிறார்கள். பெண்களுக்கு கேட்கும்திறன் அதிகம்; ஆண்களுக்கு பார்க்கும் திறன் அதிகம். வேறு என்னென்ன வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க!

News October 21, 2024

பெட்ரோலுக்கு இணையாக விலை உயரும் CNG?

image

வாகனங்களுக்கான CNG எரிவாயு விலை கிலோவுக்கு ₹4 – ₹6 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 1 கிலோ CNG ₹90க்கு விற்பனையாகிறது. விலை உயர்ந்தால் 1 கிலோ ₹96 வரை உயரும் எனத் தெரிகிறது. இதனால், அதிகளவில் CNG வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.

News October 21, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் எது? 2) இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியது யார்? 3) கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழும் மீன் எது? 4) ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு எது? 5) RAW என்பதன் விரிவாக்கம் என்ன? 6) வாழ்நாளில் ஒரே ஒரு முட்டை இடும் பறவை எது? 7) அதிக பற்களைக் கொண்ட விலங்கு எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 21, 2024

வெடிகுண்டு மிரட்டல்: விதிகளில் மாற்றம்

image

மத்திய அரசு மிரட்டல் அழைப்புகளால் விமான சேவைக்கு இடையூறு ஏற்படாத வகையில், விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி பயணிகள் மற்றும் சரக்கு பயணிகளின் கைப்பைகளை சோதிக்கும் இரண்டாம் நிலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் சோதனை தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே கணக்கிலிருந்து பல SMSகள் வருவதால், அவர்களை பிடிக்க VPN வல்லுநர்களுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News October 21, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ஆசிய கிராஸ் கன்ட்ரி: மகளிருக்கான 10 km ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சீமா (37 நிமிடம் 20 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். ➤ஜோகர் கோப்பை: 2ஆவது லீக் சுற்றில் இந்திய ஹாக்கி அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தியது. ➤புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 39-34 என்ற புள்ளிகளில் பெங்கால் அணியை வீழ்த்தியது. ➤புதிய விளையாட்டு மசோதா, NSFOIஇன் தன்னாட்சியை பாதிக்குமென PT உஷா தெரிவித்தார்.

News October 21, 2024

Recipe: காசி கொழுக்கட்டை செய்வது எப்படி?

image

சம்பா கோதுமை ரவை (ஒரு கப்), அவல், வேர்க்கடலை (தலா கால் கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நெய் & ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு வடிகட்டிய வெல்ல பாகை (தேவையான அளவு) சேர்த்து பிசையவும். சூடான இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, இந்த மாவை பிடித்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான காசி கொழுக்கட்டை ரெடி.

News October 21, 2024

புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

image

தங்கத்திற்கு போட்டியாக கடந்த சில நாள்களாக வெள்ளி விலையும், கடுமையாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ₹2 அதிகரித்து ஒரு கிராம் ₹109க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ஒரு கிலோ ₹1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

News October 21, 2024

FLASH: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

image

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹58,400க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ஒரு கிராம் ₹7,300க்கும் விற்கப்படுகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,640 உயர்ந்துள்ளது. விலை உயர்வால், குண்டுமணி அளவு தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடுத்தர மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!