news

News October 21, 2024

வெற்றிபெற ஃபிட்னெஸ் மட்டும் போதாது

image

தொடர் தோல்விகளால் துவண்ட பாக்., செய்த சில மாற்றங்களே, 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வெல்ல உதவியது. பாபர் அசாம், அஃப்ரிதி, நசீம் ஷா என ஸ்டார் பிளேயர்களை கழற்றிவிட்ட பாக்., வாரியம், மைதானத்தை சுழற்பந்துக்கு சாதகமாக மாற்றியது. ஆனால், ஸ்பின்னர்களான சஜித் கான், நோமன் அலி இருவரும் 2 km-ஐ 8 நிமிடத்தில் ஓடமுடியாமல் fitness test-ல் ஃபெயிலானவர்கள். இருந்தும் அணி நம்பிக்கை வைக்க, இருவரும் 20 Wkts அள்ளினர்.

News October 21, 2024

விடுமுறை குறித்து அரசு அதிகாரப்பூர்வ செய்தி

image

தீபாவளிக்கு மறுநாள் (நவ.1) வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, விடுமுறைக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. நவ.1ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, இதனை ஈடு செய்யும் வகையில் நவ.9ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை அளிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News October 21, 2024

பிரேசில் அதிபருக்கு மூளையில் ரத்தக்கசிவு

image

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வீட்டில் கீழே விழுந்ததில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கீழே விழுந்தபோது, பின் தலையில் பலமாக அடிபட்டதால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News October 21, 2024

ரீ-ரீலீஸில் கலக்கிய VTV திரைப்படம்

image

காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயமாக இருக்கும். திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பி.விஆர் வி.ஆர் திரையில் 142 வாரங்களில் ஒரு காட்சி என இப்படம் 1,000வது நாளைக் கொண்டாடுகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை VTV படைத்துள்ளது.

News October 21, 2024

காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

image

1959 அக். 21ஆம் தேதி, லடாக்கில் சீனப் படை மறைந்திருந்து, திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்களை வீர தீரத்துடன் எதிர்கொண்ட மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 காவலர்கள், ராணுவத்தினர் களத்திற்கு வரும்வரை உயிரை துச்சமென நினைத்து போராடி முடிவில் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் தியாகிகளான அவர்களை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக். 21இல் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

News October 21, 2024

இன்றே கடைசி: 10th முடித்தவர்களுக்கு வேலை

image

NABARD வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.21) கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ₹35,000 வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <>www.nabard.org<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

News October 21, 2024

வெளிநாட்டு தமிழறிஞர்களும் அவர்களின் நூல்களும்

image

➤அண்டிரிக் அடிகளார் – தம்பிரான் வணக்கம் (1578) ➤ராபர்ட் தெ நோபிலி – கடவுள் நிர்ணயம் (1605) ➤ மனுவேல் மார்த்தின்ஸ் – இறைவேண்டல் (1625) ➤அந்தோம் ப்ரொவேன்சா – தமிழ் போர்த்துகீசிய அகராதி (1679) ➤ஃபிலிப் பல்தேயுஸ் – யாழ்ப்பாண வரலாறு (1681) ➤சீகன் பால்கு ஐயர் – தமிழ் நூற்பட்டியல் (1706) ➤வீரமாமுனிவர் – செந்தமிழ் இலக்கணம் (1710) ➤யோஹன் குருண்ட்லர் – தமிழக மருந்து முறைகள் (1718).

News October 21, 2024

அதானி கொடுத்த ரூ.100 கோடி: போட்டுத் தாக்கும் பாஜக

image

தெலங்கானாவில், இளைஞர்களின் தொழில்சார் திறன்களை வளர்க்கும் நோக்கில், Skills University-க்கு அதானி ஃபவுண்டேஷன் ரூ.100 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இதை கையில் எடுத்துள்ள BJP, ஒருபக்கம் அதானி பற்றி ராகுல் கடுமையாக விமர்சிக்க, மறுபக்கம் காங்., அரசு அதானியிடம் நன்கொடை பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளது. அதானி சிமென்ட் பேக்டரி விவகாரம் கோர்ட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த நன்கொடை வந்துள்ளதாக விமர்சித்துள்ளது.

News October 21, 2024

BJPயில் இருந்து ADMKக்கு தாவியவர்களுக்கு பதவி

image

பாஜகவில் இருந்து விலகி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை இபிஎஸ் கொடுத்துள்ளார். நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு செயலாளர் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மன்ற துணைs செயலாளராக தடா து.பெரியசாமி , சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரை இபிஎஸ் நியமித்துள்ளார்.

News October 21, 2024

தனியார் பேருந்துகளை இயக்க அரசுத் திட்டம்

image

தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பயணிகள் கூடுதலாக பயணிப்பதால், பண்டிகைகளில் மட்டும் அந்தப் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றுக்கு அரசு ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் என்றும் கூறினார். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது அரசின் பணத்தை வீணடிக்கும் செயல் என CITU எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!