news

News October 21, 2024

ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்

image

வங்கதேசம் – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இன்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. BAN முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய SA 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த 1987ல் டெல்லியில் நடைபெற்ற IND – WI இடையேயான போட்டியில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதே ஒரே நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டாக உள்ளது.

News October 21, 2024

தொண்டர்களை சந்திக்க ரேம்ப் வாக் செய்யும் விஜய்

image

TVK முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 85 ஏக்கர் நிலத்தில் 60 அடி அகலம், 170 அடி நீளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது. அதில் விஜய் ரேம்ப் வாக் செய்து தொண்டர்களை சந்திக்கும் விதமாக 800 மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறதாம். நாளை முதல் அக்.26 வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

News October 21, 2024

வேர்க்கடலையில் எது நல்லது? வறுத்ததா… வேகவைத்ததா…

image

‘ஏழைகளின் பாதாம்’ என அழைக்கப்படும் வேர்க்கடலையை யார், எப்படிச் சாப்பிடலாம் என்று ஒரு கணக்கு இருக்கிறது. வறுத்த வேர்க்கடலையை விட வேக வைத்த கடலையே சிறந்தது. வறுத்தக்கடலை எளிதில் செரிமானமாகாது. புரத தேவையை பூர்த்தி செய்யும் வேர்க்கடலையை வயதானவர்களுக்கும் புரதச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் நீராவியில் அவித்து மாலைநேர ஸ்னாக்ஸாக கொடுக்கலாம். உடற்பயிற்சி செய்வோரும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

News October 21, 2024

‘MISS YOU AMMA’ கிச்சா சுதீப் உருக்கம்

image

24 மணி நேரத்தில் தனது வாழ்வில் அனைத்தும் மாறிவிட்டதாக, நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவரது தாயார் நேற்று காலமானார். இதுகுறித்து Xஇல் உருக்கமாக பதிவிட்டுள்ள அவர், தனது வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த தனது அம்மா, மனித வடிவிலான கடவுள் எனக் கூறியுள்ளார். மேலும், தனது வாழ்வில் விலைமதிக்க முடியாத ஒன்று தன்னைவிட்டு பிரிந்துவிட்டது. ‘MISS YOU AMMA’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 21, 2024

சாலை விபத்தை தடுக்க வேண்டிய நேரம் இது

image

<<14415476>>சாலை விபத்தில்<<>> தமிழகம் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. எனவே, சாலை விபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. குறிப்பாக, நகர்ப்புற வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகளை அமைத்து, மது போதையில் வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

News October 21, 2024

கோலி In மற்றவர்கள் Out

image

ஐபிஎல்லில் பெங்களூரு அணி விராட் கோலியை மட்டும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்ற நிலையில், கோலியை மட்டும் தக்க வைத்துவிட்டு மற்றவர்களை ஏலத்தில் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளது. அதைப்போல் குஜராத் டைடன்ஸ் அணியும் வேகப்பந்து வீச்சாளர் ஷமியை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் கில், ரஷீத் கான் ஆகியோரும் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.

News October 21, 2024

இந்த மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட்

image

20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, மயிலாடுதுறையில் மிக கனமழையும் (Orange Alert), காஞ்சி, செங்கல்பட்டு, தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் கனமழையும் (Yellow Alert) பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

BBC Documentary தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

image

மோடி தொடர்பாக BBC வெளியிட்ட “India: The Modi Question” documentaryக்கு மத்திய அரசு தடைவிதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜனவரி 2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் எதிர் பிரமாணப் பத்திரம் இன்னும் பதிவு செய்யப்படாததால் வழக்கை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.

News October 21, 2024

ஆப்ஸ் 4U: வேலை தேட உதவும் லிங்க்ட் இன் (linkedin)

image

நீங்கள் ஒரு புரபஷனலோ, புதிதாக வேலை தேடுபவரோ, நல்ல சம்பளத்தில் புது வேலைகளை தேடவும், Job trends அறியவும் linkedin சிறந்த தளம். பெரிய கம்பெனிகளின் HR-கள், வேலை வாய்ப்புகளை இதில் பகிர்கிறார்கள். உங்கள் education, skills, experience போன்ற தகவல்களுடன், இதில் ஒரு profile-ஐ உருவாக்கி, உங்கள் துறைசார்ந்த மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்கள் Skills-ஐ வளர்த்துக்கொள்ளவும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

News October 21, 2024

சாலை விபத்தில் தமிழகத்திற்கு முதல் 2 இடம்

image

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. இதுதொடர்பான தகவலில், உ.பியில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிராவில் 15,366 பேரும் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதேபோல, சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் (72,292), ம.பி., கேரளா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன.

error: Content is protected !!