news

News October 21, 2024

2030க்குள் 3ஆவது பெரிய நாடு இந்தியா: ஜெய்சங்கர்

image

2030க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் TV நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பம், AI மற்றும் செமிகண்டக்டரின் வளர்ச்சியை பார்க்கும்போது, இந்தியாவின் திறன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றார். மேலும், மக்கள்தொகை, திறன் ஆகியவை இந்தியாவில் அதிகம் என்பதால், யார் முன்னேறுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியம் எனக் கூறினார்.

News October 21, 2024

அதிரடி ஆட்டம்.. 20 பந்துகளில் அரை சதம்

image

Emerging ஆசிய கோப்பை தொடரில் UAE அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிவரும் அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். எதிரணியின் பவுலிங்கை துவம்சம் செய்துவரும் அவர் தற்போது வரை 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடியால் இந்தியா 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிக்கு இன்னும் 28 ரன்களே தேவை.

News October 21, 2024

ரத்தசோகை என்றால் என்ன?

image

நம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் (அ) ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது ரத்தசோகை எனப் படுகிறது. உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் சிவப்பணுக்கள் குறையும்போது, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல், மயக்கம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஒப்பீட்டளவில் பெண்களுக்கே ரத்தசோகை அதிகம் உள்ளது. இதனால் பிரசவத்தில் சிக்கல், தாய் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். பிறக்கும் குழந்தையையும் இது பாதிக்கும்.

News October 21, 2024

‘SURIYA 45’ படத்தில் இணையும் மிருணாள் தாகுர்

image

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘SURIYA 45’ படத்தில் ருக்மிணி வசந்த் & மிருணாள் தாகூர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வீக ஃபேன்டஸி கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News October 21, 2024

அதிக கட்டணம்: இனி கவலை வேண்டாம், உடனே அழைக்கவும்

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தயாராகி வருகின்றனர். இதைப்பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151, 01044-2474 9002, 044-2628 0445, 044-2628 1611 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

News October 21, 2024

ஆடம்பர வீடுகள் விற்பனை 38% உயர்வு: CBRE

image

சென்னை உள்பட நாட்டிலுள்ள 7 முக்கிய நகரங்களில், ₹4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகள் விற்பனை 38% அதிகரித்துள்ளது. இதுகுறித்து CBRE வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி – செப்டம்பர் வரை 12,630 ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு 130 வீடுகள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பாண்டு 185 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

பெண்களிடம் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்!

image

50 வயதுக்குட்பட்ட இந்திய பெண்களிடம் புற்றுநோய் பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ICMR தரவுகளின்படி, நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 28% மார்பக புற்றுநோய் பங்கு வகிக்கிறது என அறியமுடிகிறது. மரபணு மாற்றங்கள், உடல் பருமன், அதிகப்படியான சர்க்கரை & பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு ஆகியவை மார்பக புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News October 21, 2024

SHOCKING: 5 வயது சிறுமியை ரேப் செய்த 3 சிறுவர்கள்

image

உ.பி., பல்லியா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை 3 சிறுவர்கள் சேர்ந்து ரேப் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மேலும் கொடுமையானது இச்சிறுவர்களின் வயது 6, 13, மற்றும் 16 என்பதாகும். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, வன்கொடுமை செய்த, 3 சிறுவர்கள் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டு, போலீஸ் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் கொடூரர்களாக மாற யார் காரணம்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

News October 21, 2024

நாளை முக்கிய அமைச்சரின் ஊழல் வெளியாகிறது

image

முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அந்த அமைச்சர் யார், அவர் செய்த மோசடி என்ன?, எத்தனை கோடி மோசடி என்ற முழு ஆதாரங்கள் வெளியிடப்படும். புகாருடன் நாங்கள் தயார்; விசாரித்து நடவடிக்கை எடுக்க DVAC தயாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் சவால் விடுத்துள்ளது. நாளை முழுவதும் இந்த டாப்பிக் தான் செம ஹைலைட்ஸ் ஆக இருக்கும்போல.

News October 21, 2024

எந்த ராசிக்கு எந்தக் கல்?

image

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.

error: Content is protected !!