India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை NIA கைது செய்துள்ளது. 2022இல் காரில் மறைத்து வைத்த சிலிண்டர் வெடித்ததில், தீவிரவாதி முபீன் என்பவர் பலியானார். இதுதொடர்பாக அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பாவாஸ் ரஹ்மானை கைது செய்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கு 3 பேரும் நிதி அளித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (அக்.22) காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் காலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, நாகை, திருவாரூர், திண்டுக்கல்லில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.
* வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்
* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை
* அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்
* கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம். SHARE IT.
பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சி EX துணைத் தலைவர் லூயிஸ் மராண்டி, JMM கட்சியில் இணைந்தார். 2014 தேர்தலில் சிபுசோரனை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடித்தவர் லூயிஸ் மராண்டி. பாஜக EX துணைத் தலைவரான அவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் சிபுசோரனை நேரில் சந்தித்து அவரது கட்சியில் சேர்ந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது வருகை முக்கியமானதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017இல் வெளியான துப்பறிவாளன் வெற்றி பெற்றது. இதையடுத்து, அப்படத்தின் 2ஆவது பாகத்தை மிஷ்கின் மீண்டும் இயக்கினார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் விலகவே, விஷாலே இயக்குவதாக அறிவித்தார். அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், திரைக்கதையில் சில மாற்றம் செய்து டிசம்பரில் படப்பிடிப்பை விஷால் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
▶அக். 22 (ஐப்பசி 5) ▶செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM▶குளிகை: 12:00 PM – 1:30 PM▶ திதி: சஷ்டி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: மிருகசீரிஷம் ▶சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம். SHARE பண்ணுங்க.
போரடித்தால் குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து & தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.
தீபாவளியன்று குறைந்த ஒலி மாசு, குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய பட்டாசுகளை தவிர்க்கவும், மருத்துவமனைகள், கோயில் போன்ற இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடிசைப் பகுதிக்கு அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுவாக கேங்ஸ்டர்ஸ் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர். ஆனால், சில கேங்ஸ் சர்வதேச உறவையே தீர்மானிப்பார்கள். அப்படி இந்தியாவுக்கு தலைவலியாக இருந்தது தாவூத் இப்ராகிம் கேங். பாக்., உதவியுடன், துபாயில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகள் செய்து வந்தது தாவூத் கேங். இப்போது லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பெயர் அடிபடுகிறது. இம்முறை இந்திய அரசுக்காக இந்த கேங் வேலை செய்வதாக கனடா, அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றன.
24 மணி நேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை 6.78 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்து விட்டதாகவும் இதுமட்டுமன்றி, ரஷ்யாவுக்கு சொந்தமான 9,047 டாங்கிகள், 18,111 கவச வாகனங்கள், 19,565 பீரங்கிகள், 369 போர் விமானங்கள், 329 ஹெலிகாப்டர்களை அழித்து விட்டதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவலை ரஷ்யா உறுதி செய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.