news

News October 22, 2024

15 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை

image

இன்று (அக்.22) காலை 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகையில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT

News October 22, 2024

66 சதம்.. லாரா சாதனையை சமன் செய்த புஜாரா

image

முதல் தர கிரிக்கெட்டில் 66வது சதம் விளாசி லாரா சாதனையை புஜாரா சமன் செய்தார். ரஞ்சி போட்டியில் சவுராஷ்ட்ரா, சத்தீஸ்கர் அணிகள் விளையாடின. இதில் சவுராஷ்ட்ரா வீரர் புஜாரா 197 பந்தில், ரஞ்சியில் 25ஆவது சதத்தை விளாசினார். முதல்தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களையும் கடந்தார். இதன்மூலம் அதிக ரன்குவித்தோர் பட்டியலில் கவாஸ்கர், சச்சின், டிராவிட்டுக்கு அடுத்து 4ஆவது வீரராக புஜாரா இடம்பிடித்தார்.

News October 22, 2024

என்னை மன்னிச்சுருங்க.. சல்மானை மிரட்டியவர் SMS

image

₹5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர், தன்னை மன்னிக்கும்படி மும்பை போலீசுக்கு SMS அனுப்பியுள்ளார். சல்மானுக்கு பிஸ்னோய் கும்பலிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. இந்நிலையில், மிரட்டல் SMS குறித்து போலீஸ் விசாரித்து வந்தது. தற்போது அதேநபர், தன்னை மன்னிக்கும்படியும், தவறாக மிரட்டல் வந்துவிட்டது என்றும் SMS அனுப்பியுள்ளார். அவர் ஜார்க்கண்டை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

News October 22, 2024

மோடி இன்று ரஷ்யா பயணம்.. ஏன் தெரியுமா?

image

பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக PM மாேடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு, காசான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக மோடி ரஷ்யா செல்கிறார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் போர் நடக்கும் நிலையில், 2024இல் ரஷ்யாவுக்கு மோடி செல்வது இது 2ஆவது முறையாகும். மாநாட்டின் இடையே பிரிக்ஸ் தலைவர்களை சந்தித்து பேசலாம் எனக் கூறப்படுகிறது.

News October 22, 2024

சியோமி, சாம்சங் சும்மா.. இந்தியாவில் நாங்களே நம்பர் 1

image

இந்தியாவில் 91 லட்சம் ஸ்மார்ட்பாேன்களை VIVO இந்தாண்டின் 3ஆவது காலாண்டில் விற்பனை செய்துள்ளது. இது இந்திய ஸ்மார்ட்பாேன் சந்தையில் 26% ஆகும். அதேசமயத்தில் முந்தைய ஆண்டுடன் (72 லட்சம்) ஒப்பிடுகையில் 20 லட்சம் அதிகம். இதன்மூலம் இந்திய சந்தையில் நம்பர் 1 ஸ்மார்ட்பாேன் பிராண்ட் எனும் பெயரை VIVO பெற்றுள்ளது. சியோமி (78 லட்சம்) 2ஆவது இடத்திலும், சாம்சங் (75 லட்சம்) 3ஆவது இடத்திலும் உள்ளன.

News October 22, 2024

இன்றே கடைசி: ரயில்வேயில் 5,066 வேலை

image

இந்திய ரயில்வேயின் மேற்குப் பிரிவில் 5,066 அப்ரன்டிஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த வேலைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் rrc-wr.com இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் அவகாசம் நிறைவடையவுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சியும், வயது வரம்பாக 15- 24 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. SHARE IT

News October 22, 2024

ஆண் குழந்தை பிறந்தது… சர்பராஸ் HAPPY

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சர்பராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சர்பராஸ் கான் கடந்த ஆண்டு ரொமானா ஜாஹூர் என்பவரை திருமணம் செய்து காெண்டார். தற்போது அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்தத் தகவலை சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். அண்மையில்தான் அவர், நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசியிருந்தார்.

News October 22, 2024

ரஜினி அதை இனி செய்யவே கூடாது… டாக்டர்கள் அட்வைஸ்

image

வேட்டையனுக்கு பிறகு “கூலி”யில் ரஜினி நடித்து வந்தார். திடீரென உடல்நிலை பாதித்து ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். இதையடுத்து கூலியில் நடிக்காமல் அவர் உள்ளார். அவரை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் செய்யும் முயற்சிக்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இனி படப்பிடிப்பில் கலந்து காெண்டாலும் சண்டை காட்சியில் மட்டும் ரஜினி நடிக்கக் கூடாதென அறிவுரை வழங்கியுள்ளனராம்.

News October 22, 2024

FLASH: 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த மாவட்டங்கள்? *இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி. *நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 22, 2024

இலவசமாக ஜெர்மன் கத்துக்க ஆசையா? இதை படிங்க

image

தமிழக அரசு சார்பில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 25ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து சென்னை, திருச்சி, கோவை, மதுரையில் நேரடி பயிற்சி வருகிற நவ.1ஆம் தேதி முதல் வாரத்திற்கு 5 நாள்கள் அளிக்கப்படவுள்ளது. ஜெர்மன் மொழியை இலவசமாக கத்துக்க மேலே உள்ள க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!