India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 – ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. குமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15,000 படகுகள் கடலுக்கு செல்லாது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடியில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இப்பழக்கங்கள் உங்களை ஏழையாக மாற்றும் *எந்த ஒரு பொருளை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தேவையில்லாத ஷாப்பிங் *வீட்டில் உணவு இருக்கும் போதும் அடிக்கடி வெளியில் சாப்பிடுவது *புகைபிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையானால் கணக்கு தெரியாமலே அதிகமாக செலவிடுவோம் *மளிகை சாமானை அதிகளவில் தேவையில்லாமல் வாங்கி குவிப்பது. இப்பழக்கங்களை மாற்றுங்கள்.
அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்றும் அவரை யாரும் வெளியேற்ற முடியாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி இழுபறி இல்லாமல் அமைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதிமுக உடனான கூட்டணிக்காகவே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஏப்.15) திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது. அதேநேரம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10.31 மணிக்குத் தொடங்கி 11.30 மணிக்குள் நிறைவடைய உள்ளது.
9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000 வரவு வைக்கப்படவுள்ளன. அதே நேரம், மேல்முறையீடு செய்த பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் <<16081235>>MLA <<>>உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது <<16095694>>அதிருப்தி <<>>அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக சிறுபான்மையினர் அணியின் முக்கிய நிர்வாகி கே.எஸ்.முகமது கனி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி 2ஆக பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ஆம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.
தனது வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் கடந்த சீசனில் அசத்தியவர் மயங்க் யாதவ். இதனால் அவரை லக்னோ அணி ₹11 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் லக்னோ அணியில் இதுவரை இணையாமல் இருந்தார். தற்போது அவருக்கு காயம் குணமடைந்துவிட்டதால் நாளை லக்னோ அணியுடன் மயங்க் இணைய உள்ளார். 6 போட்டியில் 4 வெற்றியை பதிவு செய்துள்ள LSG-க்கு மயங்க் வருகை மேலும் வலுசேர்க்கும்.
Sorry, no posts matched your criteria.