news

News October 22, 2024

என்றென்றும் மாறா இளமையுடன் மஞ்சு!

image

படையப்பா படத்தில் வரும் ”வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்பதை போல் வயதானாலும் நடிகை மஞ்சு வாரியரின் அழகு கூடி கொண்டே செல்கிறது. இதனை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. சிரித்த முகத்துடன் இயற்கையை ரசித்தவாறு இருக்கும் மஞ்சு “நீங்கள் எப்போதும் வைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய செல்வம், மன அமைதி” எனப் பதிவிட்டுள்ளார்.

News October 22, 2024

தொழில் செய்யும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்!

image

உத்யோகினி என்ற பெயரில் பெண்களுக்கான சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தொழில் செய்யும் பெண்களுக்கு ₹3 லட்சம் வரை வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் ₹1.50 லட்சத்தை திருப்பி செலுத்தினால் போதும். இதில் கிராமத்தில் வசிக்கும் பெண்கள், தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

News October 22, 2024

வயநாடு மக்களுக்கு ராகுல் அழைப்பு

image

வயநாடு மக்கள் தன் இதயத்தில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதாக ராகுல் காந்தி நெகிழ்ந்துள்ளார். இந்த தொகுதிக்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை தன்னால் கற்பனை செய்யக்கூட முடியாது என்று கூறிய அவர், வயநாடு மக்களின் தேவைக்காக நாடாளுமன்றத்தில் அவர்களது குரலாக பிரியங்கா ஒலிப்பார் என்று உறுதியளித்தார். நாளை பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்கையில் மக்கள் தங்களுடன் வருமாறும் அழைப்பு விடுத்தார்.

News October 22, 2024

ரஜினியிடம் கோரிக்கை விடுத்த லைகா நிறுவனம்

image

2.0, தர்பார், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ரஜினியின் 4ஆவது படம் வேட்டையன். ₹450 கோடியில் தயாரான வேட்டையன் வசூல் கடந்த 10 நாட்களில் பாதியைக்கூட தாண்டவில்லை. இந்நிலையில், ரஜினி சம்பளம் வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுத்தால்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும் என லைகா
சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி பதிலுக்காக லைகா தரப்பு WAITING!

News October 22, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14421458>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) இங்கிலாந்து (பிரிட்ச்லி சுரங்கப்பாதை) 2) தமிழ் 3) புளூட்டோ 4) க்ரஸ் ஆன்டிகோன் 5) Food Safety & Standards Authority of India 6) பேன் 7) ரூத் ஹேன்ட்லர். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 22, 2024

10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது!

image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

News October 22, 2024

டெஸ்டில் அதிக சிக்சர் விளாசிய 6 இந்திய வீரர்கள்

image

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய முதல் 6 இந்திய வீரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
1) சேவாக் – 90 சிக்சர் (178 டெஸ்டுகள்)
2) ரோஹித் ஷர்மா – 88 சிக்சர் (107 டெஸ்டுகள்)
3) தோனி – 78 சிக்சர் (144 டெஸ்டுகள்)
4) சச்சின் டெண்டுல்கர் – 69 சிக்சர் (329 டெஸ்டுகள்)
5) ரவீந்திர ஜடேஜா – 66 சிக்சர் (109 டெஸ்டுகள்)
6) பண்ட் – 64 சிக்சர் (62 டெஸ்டுகள்)

News October 22, 2024

ஹிஸ்புல்லாவின் ₹4,200 கோடி.. மோப்பம் பிடித்த இஸ்ரேல்

image

ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான ₹4,200 கோடி மதிப்பிலான பணம், தங்கத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ல அல்சஹல் மருத்துவமனைக்கு நேர் கீழாக இருந்த, ஹசன் நசரல்லாவின் பதுங்கு குழியில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பணத்தைக் கொண்டு லெபனானை மறுகட்டமைப்பு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 22, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤மாவில் சிறிது சீரகத்தை தேய்த்துப் போட்டு, தோசை சுட்டால் மணமாக இருக்கும். ➤இனிப்பு பொங்கல் செய்யும்போது தேங்காய் பால் ஊற்றிக்கிளறி, இறக்கினால் சுவை கூடும். ➤காய்ந்த ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. ➤கரைக்க கடினமாக இருக்கும் புது புளியை கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும். ➤சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத் தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

News October 22, 2024

அமைச்சருக்கு எதிராக ₹411 கோடி ஊழல் புகார்..!

image

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ₹411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரளித்துள்ளது. சென்னை GST சாலையில் அந்த அரசு நிலம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர், துணை முதல்வர் செயலாளர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது. டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைச்சரின் மகன்கள் அபகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

error: Content is protected !!