India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா-2’ திரைப்படம், ரிலீசுக்கு முன்னதாகவே ₹1,000 கோடியைத் தாண்டி வியாபாரமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் உரிமத்தில் ₹640 கோடி, ஓடிடி உரிமத்தில் ₹275 கோடி பிசினஸாகியுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, பாடல்களின் உரிமமாக ₹65 கோடி மற்றும் சேட்டிலைட் உரிமமாக ₹85 கோடி என மொத்தம் ₹1,065 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக ஒருவர் தனது கை கட்டைவிரலில் மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும். ஆட்காட்டி விரலில் புஷ்பராக கல் (குரு), பவளம் (செவ்வாய்) அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் & அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும். வைரத்தை மோதிர விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை (அ) வைரம் அணிவது சிறப்பு. ராகு கேதுவிற்கு கல் அணிவதை ஜாதக ரீதியாகப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.
தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத் துறை கைவிட வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது அப்பட்டமான தொழிலாளர் விரோத போக்கு எனவும், போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், பட்ஜெட்டில் கூறியபடி புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளாா்.
‘Ormax Media’ நிறுவனம் மாதந்தோறும் இந்தியாவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான பட்டியலில், நடிகர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரபாஸ், ஷாருக் கான், அஜித், ஜூனியர் NTR, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, அக்ஷய் குமார், ராம் சரண், சல்மான் கான் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, வேலூர், காஞ்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிக கனமழை (Orange Alert) பெய்யும் என கணித்துள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை பார்த்து சீமான் பயப்படுகிறார் என்று நாதக முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சியடைய சீமான் அனுமதிப்பதில்லை என சாடிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் நாதக பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் வேலைகளை சீமான் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மருத்துவப் பேராசிரியர் (NTET) தேசிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.22) கடைசி நாளாகும். சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவப் படிப்புகளில் முதுநிலை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்.25 கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <
SEBI தலைவர் மாதபி புரி மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடியும் வரை (2025 பிப்ரவரி) அவர் பொறுப்பில் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. அதானி நிறுவனங்களில் பங்கு, ICICI வங்கியிடம் ஊதியம் பெற்றது, ZEE குழும தலைவரிடம் லஞ்சம் கேட்டது என அவர் மீது அடுக்கடுக்காக புகார் அளிக்கப்பட்டது.
நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுவதாக ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. நித்திக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு அவர் வருவதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகளில் முதலில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்திய நீதிபதி, நித்தியானந்தா சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
தளவாய் சுந்தரத்தை அதிமுகவில் இருந்து நீக்கி, கட்சியில் தனக்கு எதிராக அணி திரண்டுவரும் சீனியர்களுக்கு இபிஎஸ் வார்னிங் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், போட்டி பொதுக் குழு, சிலருக்கு கல்தா என்ற செய்தி அனைத்துமே வதந்திதான். அதில் எள்ளளவிற்கும் உண்மையில்லை என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.