India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 3 நாள்களுக்கு இடி -மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. இன்று முதல் 24ம் தேதி வரை வடதமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. வருகிற 25 முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. SHARE IT.
BAN எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அஷ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம்: ➤உலகிலேயே அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர். ➤இந்திய அணிக்காக 2ஆவது அதிகபட்சமாக 522* விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர். ➤அதிகமுறை FIFER (5wkt) வீழ்த்திய இந்திய வீரர். ➤37 முறை FIFER எடுத்து, 20 முறை 50+ ரன்கள் எடுத்த ஒரே வீரர். ➤அதிக முறை ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்.
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திசநாயக, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவியது. அதிபர் ரணில் விக்ரமசிங்க, நமல் ராஜபட்ச பின்னடைவைச் சந்தித்தனர். முடிவில் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2ம் கட்டமாக விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
எளிய நடன அசைவுகள் மூலம் அற்புதமாக கோரியோகிராப் செய்யும் தினேஷ் மாஸ்டரை ரொம்ப பிடிக்கும் என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ‘வேட்டையன்’ படம் குறித்து பேசிய அவர், “மனசிலாயோ பாடல் வெற்றியடைந்ததற்கு காரணம் அனிருத், நடன இயக்குநர் தினேஷ், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, பாடகர்கள் யுகேந்திரன், தீப்தி சுரேஷ் ஆகியோர் தான். இயக்குநர் கேட்ட இடத்தில் தமிழ்க்குமரன் படப்பிடிப்பு நடத்திக் கொடுத்தார்” என்றார்.
ஒரே நாளில் இந்தியா முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடிவிடலாம் என திருமாவளவன் கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் மது விலக்கை வலியுறுத்தும் போது, ஏன் மது ஆலைகள் இயங்குகின்றன, மது விற்பனை அதிகரிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தேசிய அளவில் மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டமியற்ற வேண்டும் என்றும், அதற்கான முயற்சியை VCK முன்னெடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
BAN எதிரான 2ஆவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் விளையாடிய IND அணியே, 2ஆவது போட்டியிலும் விளையாடுகிறது. அணி விவரம்: ரோஹித் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கில், கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயாள். செப்.27இல் கான்பூரில் 2ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளது.
புரட்டாசி மாதத்தையொட்டி மீன் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது. புரட்டாசியில் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சிலர் தவிர்ப்பது வழக்கம். இதனிடையே, சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் கூட்டமின்றி காணப்பட்டது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.800 விற்பனையான சீலா மீன் ரூ.500-க்கும், ரூ.500 விற்பனையான பாறை மீன் ரூ.300க்கும் விற்பனையானது.
BAN எதிராக 2ஆவது இன்னிங்ஸில் 3 wkt வீழ்த்தியதன் மூலம் கும்ளேவின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார். இதுவரை 101 டெஸ்டில் விளையாடிய அவர், 2வது இன்னிங்ஸில் 96வது wkt எடுத்துள்ளார். இதற்கு முன் கும்ப்ளே 94 wkt எடுத்ததே IND பவுலரின் அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. டெஸ்டில் தற்போது வரை அஸ்வின் 519 wkt எடுத்துள்ளார். இதன் மூலம் அதிக wkt எடுத்தவர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளார்.
விதவைப்பெண் மறுமணத்திற்கு தமிழக அரசு இலவசமாக 8 கிராம் தங்கம், நிதியுதவி வழங்குகிறது. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டத்தின்கீழ், பட்டதாரி அல்லாத விதவைக்கு ₹25,000, பட்டதாரிக்கு ₹50,000 அளிக்கிறது. மணமகள் வயது குறைந்தது 20, மணமகன் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மறுமணம் செய்த 6 மாதத்திற்குள் இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தாம் ஊழல் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே வந்தேன், அதனாலேயே ராஜினாமா செய்தேன் என்று கூறினார். கெஜ்ரிவால் சொல்வது குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே கமெண்ட் பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.