news

News October 23, 2024

நேட்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த துருக்கி

image

ரஷ்யா, சீனா செல்வாக்குடன் உள்ள பிரிக்ஸ் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து நேட்டோ அமைப்புக்கு துருக்கி அதிர்ச்சியளித்துள்ளது. ரஷ்யா, அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான ராணுவ கூட்டணியாக கருதப்படும் நேட்டோவில் துருக்கியும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் அந்நாடு பிரிக்ஸில் சேர விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் துருக்கியை சேர்ப்பது குறித்து பிரிக்ஸ் இன்னும் முடிவு செய்யவில்லை.

News October 23, 2024

பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர்

image

புதிய பாம்பு இனத்திற்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இமயமலையில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இந்த பாம்பு வகைக்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக டிகாப்ரியோ விழிப்புணர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2024

இரவு 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழை

image

இரவு 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
*இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: தி.மலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி.
*லேசான மழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.

News October 23, 2024

காவி வண்ணம் அடிப்பது ஏன்? தமிமுன் அன்சாரி

image

அரசியல் களத்தில் தடுமாறுவதால் நிறத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதாக தமிமுன் அன்சாரி குற்றஞ்சாட்டியுள்ளார். BSNL நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். I.N.D.I.A கூட்டணி எழுச்சியுறுவதால் Connecting India என்ற வாசகம், Connecting Bharat என மாற்றப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் சாடியுள்ளார்.

News October 23, 2024

ராசி பலன்கள் (23-10-2024)

image

◙மேஷம் – ஓய்வு
◙ரிஷபம் – சாந்தம்
◙மிதுனம் – உழைப்பு
◙கடகம் – உற்சாகம்
◙சிம்மம் – எதிர்ப்பு
◙கன்னி – லாபம்
◙துலாம் – ஜெயம்
◙விருச்சிகம் – செலவு
◙துனுசு – தனம் ◙மகரம் – பரிவு
◙கும்பம் – சுகம் ◙மீனம் – அனுகூலம்

News October 23, 2024

“மனதார வருந்துகிறேன்”.. ராஜீவ் காந்தி

image

காமராஜர் குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால், கடுப்பான காங்கிரஸ் கட்சியினர், அவரை கடுமையாக விமர்சித்தனர். இது, திமுக – காங்., கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. அவர் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மனதார வருந்துகிறேன் என ராஜீவ் காந்தி தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

News October 22, 2024

கனமழை: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக கோவை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. நாளையும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2024

தீபாவளியை குறிவைத்து ஆன்லைனில் மோசடி

image

தீபாவளி நெருங்கிவரும் வேளையில், பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. பலர் ஆன்லைனில் பட்டாசு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களில் மட்டும் ஆன்லைன் பட்டாசு விற்பனையை மையமாகக் கொண்டு 7 சைபர் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்கவும் எச்சரித்துள்ளனர்

News October 22, 2024

வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் புதிய சாதனை

image

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் புதிய சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 31 ரன்கள் எடுத்த அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தமிம் இக்பால் – 5134, ஷகிப் அல் ஹசன் – 4609, மொமினுல் ஹக் – 4269, ஹபிபுல் பஷார் – 3026 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News October 22, 2024

ஒரே நாளில் ₹10 லட்சம் கோடி Loss

image

இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் பங்குகளை சரமாரியாக விற்பனை செய்ததால், அவற்றின் விலைகள் கடுமையாக சரிந்தன. இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ₹93,500 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

error: Content is protected !!