news

News October 23, 2024

உருவானது ‘டானா’ புயல்

image

வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

News October 23, 2024

இப்போதைக்கு கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: BSNL

image

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லையென BSNL தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய BSNL தலைவர் ராபர்ட் ரவி, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் அவர்களது நம்பிக்கையை பெறுவதே தங்கள் குறிக்கோள் என்றார். மேலும், சோதனை முறையில் வழங்கப்படும் 4ஜி சேவை இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக கிடைக்கும் எனவும் கூறினார்.

News October 23, 2024

கூடுதல் கவுன்டர்கள் அமைக்க சுங்கச்சாவடிகளுக்கு உத்தரவு

image

தீபாவளி நெரிசலை சமாளிக்க கூடுதல் கவுன்டர்களை அமைக்க சுங்கச்சாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 65 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு பாஸ்டேக் வசதி இருந்தாலும், ஸ்கேன் செய்ய வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்நிலையில், வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதிகளில் கூடுதல் கவுன்டர்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. (Source:தினமலர்)

News October 23, 2024

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு

image

அதிமுக OPS பிரிவைச் சேர்ந்த வைத்திலிங்கம் MLAவுக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை ஒரத்தநாடு அருகேயுள்ள அவரது வீட்டில் 11 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சென்னை சேப்பாக்கம் MLA குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடந்து வருகிறது. அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் ₹28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News October 23, 2024

எங்களுக்கு ₹750 கோடி Loss: சாம்சங்

image

தொழிலாளர்கள் போராட்டத்தால் ₹750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிய சங்க நிர்வாகி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை வந்த நிலையில், நிறுவன நடவடிக்கையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது என அந்நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

News October 23, 2024

கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

image

தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1ம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை ஒத்திவைத்துள்ளது. உள்ளாட்சிகள் தினமான நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க இருந்தது. தீபாவளிக்கு மறுநாளான அன்று, அரசு விடுமுறை அறிவித்ததால், கிராம சபை கூட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதோடு, மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

’பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் SK

image

நடிகர் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ’பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து அவர் படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News October 23, 2024

வளர்ச்சிக்கான அடிதளத்தை போட்டிருக்கிறோம்: FM

image

புதிய வளர்ச்சி வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை.யில் பேசிய அவர், முதலீடாக இருந்தாலும், வர்த்தகமாக இருந்தாலும் இந்தியாவை உலக நாடுகள் நம்புவதாகக் கூறினார். இந்திய பொருளாதார கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிதளத்தை கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 23, 2024

இன்று உருவாகிறது ‘டானா’ புயல்

image

மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‘டானா’ புயலாக உருவாகிறது. தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையை அடையும் இந்த புயல், பூரி – சாகர் தீவுகளுக்கும் இடையே 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இதனால், 25ம் தேதி அதிகாலை அதிகபட்சமாக 120KM வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

வயநாட்டில் இன்று பிரியங்கா வேட்பு மனு தாக்கல்

image

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, பின்னர் அத்தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் நவம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்காவை அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!