India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்க கடலில் உருவாகியுள்ள டானா புயலால் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கிய வெப்பமண்டல சூறாவளி பெயரிடும் அமைப்பின்படி, இந்த புயலுக்கு டானா என்று கத்தார் பெயரிட்டது. டானா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் ‘தாராள மனப்பான்மை’ என்று பொருள்.
தங்கத்தை போல் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ₹2 அதிகரித்து ஒரு கிராம் ₹112க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹9,000 அதிகரித்து வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
திமுக சிறப்பாக செயல்படுவதால் இபிஎஸ் பொறாமைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜோசியரை போல அவர் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.
தீபாவளியை முன்னிட்டு 700 புதிய ரக சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. கோ-ஆப்டெக்ஸில் பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் வன சிங்காரம் சில்க் காட்டன், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவை, போச்சம்பள்ளி சில்க், கோவை வைரோசிஸ் பட்டு, திருபுவனம் விசிறி மடிப்பு புடவைகள், ஆரணி டிஸ்யூ சேலை உள்ளிட்ட புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
1) இந்தியாவின் 2ஆவது ரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது? 2) பண்டைய இந்தியாவின் வரைபடத்தை முதலில் வரைந்தவர் யார்? 3) மிதக்கும் தாவரக் கூடுகளை உருவாக்கும் பறவை எது? 4) ஏறுதழுவல் குறித்துப் பேசும் இலக்கியம்? 5) நிறமாலையைக் காண பயன்படுத்தப்படும் கருவி எது? 6) ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம் எது? 7) UGC என்பதன் விரிவாக்கம் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டு சவரன் ₹59,000ஐ நெருங்கியது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ஒரு சவரன் ₹58,720க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ஒரு கிராம் ₹7,340க்கும் விற்கப்படுகிறது. பண்டிகை காலம் மற்றும் சுப முகூர்த்த காலங்கள் என்பதால் நகை வாங்க காத்திருந்த மக்கள் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ₹420 கோடி நன்கொடை அளித்துள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்தல், வறுமையை ஒழித்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதிலும் அர்ப்பணிப்போடு செயல்படும் அதிபர் வேட்பாளரை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன. காலை 8 மணிக்கு முன்பதிவு ஆரம்பித்த நிலையில், 10 நிமிடங்களில் முழுமையாக முடிந்தன. தீபாவளிக்கு, சென்னையில் இருந்து 10 லட்சம் பேர், சொந்த ஊர் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவை உடனே விற்றுத்தீர்ந்ததால் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தங்கம் விலையை அமல்படுத்த நகை வணிகர்கள் சங்கம் முயற்சித்து வருகிறது. இது குறித்து பேசிய அகில இந்திய ஆபரணங்களுக்கான கவுன்சில் நிர்வாகிகள், தங்கத்தை ஒரே விலையில் இறக்குமதி செய்தாலும், உள்நாட்டில் வெவ்வேறு விலையில் விற்கப்படுவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், ஒரே நாடு ஒரே தங்கம் விலையை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான பரிந்துரையை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 1,000 கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2,500 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வரும் 28, 29 ஆகிய தேதிகளுக்கு இதுவரை 50,000 டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.