news

News September 23, 2024

இந்திய செஸ் அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

image

ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை ஓபன் பிரிவில் வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் பொன்னான வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

News September 23, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ செப்.23 (புரட்டாசி 7) ▶ திங்கள் ▶ நல்ல நேரம்: 6:15 – 7:15AM & 4:45 – 5:45 PM ▶ கெளரி நேரம்: 9:15 – 10:15 AM &1:30 – 2:30 PM ▶ ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶ குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: சஷ்டி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ சந்திராஷ்டமம்: சித்திரை

News September 23, 2024

ஓடிடி செயலிகளில் இனி இது கட்டாயம்?

image

ஓடிடி செயலிகளை பயனர் பயன்படுத்தும் போது புகையிலைக்கு எதிரான எச்சரிக்கை செய்தியை, குறைந்தபட்சம் 20 வினாடிகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு செப் 1ம் தேதி வெளியான அல்லது அதற்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் அனைத்து படங்களின் ஆரம்பத்திலும், புகையிலைக்கு எதிரான எச்சரிக்கை செய்தியை, ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News September 23, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 23, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 23, 2024

மூத்த நிர்வாகிக்கு துணை முதல்வர் பதவி கேட்பீர்களா?

image

திமுக மூத்த நிர்வாகியை துணை முதல்வராக்க வேண்டும் என கேட்கும் துணிவு ஆர்.எஸ்.பாரதிக்கு உள்ளதா என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தியாவசிய பொருளின் விலையேற்றம் குறித்து பேசாமல் உதயநிதி துணை முதல்வராவது பற்றி பேசுகின்றனர் என்ற அவர், ஓட்டுக்கு மட்டும் திருமாவளவன் வேண்டும், ஆனால் தபால் தலை வெளியிட பாஜக வேண்டுமா என்றும் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

ராசி பலன்கள் (23.09.2024)

image

*மேஷம் – லாபம் வந்து சேரும் *ரிஷபம் – நன்மை பெறுவீர்கள் *மிதுனம் – தொழில் போட்டி உண்டாகும் *கடகம் – பணம் வந்து சேரும் *சிம்மம் – வெற்றி தேடி வரும் *கன்னி – அமைதி உண்டாகும் *துலாம் – பயம் தவிர்க்கவும் *விருச்சிகம் – தாமதம் செய்யாதீர் *தனுசு – நல்ல செய்தி கிடைக்கும் *மகரம் – கோபம் தவிர்க்கவும் *கும்பம் – திறமை வெளிப்படும் *மீனம் – புகழ்ச்சி கிடைக்கும்.

News September 23, 2024

கொடூரம்: சிறுமியை வன்புணர்வு செய்த சிறுவர்கள்

image

உத்தரபிரதேசத்தில் 7,8 வயதுள்ள இரண்டு சிறுவர்கள், 7 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி குளித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிறுவர்கள், தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி உடல் சோர்வாக காணப்பட்டதைக் கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, உண்மை தெரியவந்துள்ளது. 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

News September 22, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

பேராயர் <<14169127>>எஸ்றா சற்குணம்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சற்குணம் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மாறாத அன்போடு தன்னுடன் பழகியவர் என்றும், அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்கள் நெஞ்சில் நிழலாடுவதாகவும் நினைவுகூர்ந்தார். அவரது மறைவு சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு என்றும் உருகியுள்ளார்.

News September 22, 2024

லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

image

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!