news

News April 15, 2025

வரிசைக்கட்டிய சாதனைகள்… அசத்திய ‘தல’ தோனி

image

CSK கேப்டன் தோனி LSG-க்கு எதிரான மேட்ச்சில், அடுத்தடுத்த ரெக்கார்டுகளை படைத்துள்ளார் *IPL-ல் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் பட்டியலில் 2வது இடம்(18). முதல் இடத்தில் ரோஹித் (19) இருக்கிறார் *ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்கள் சேர்த்து IPL-ல் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் * IPL வரலாற்றிலேயே, அதிக இன்னிங்ஸில்(132) சிக்ஸ் அடித்த வீரர் போன்ற ரெக்கார்டுகளை தோனி படைத்துள்ளார்.

News April 15, 2025

Health Tips: தினமும் மாதுளை சாப்பிடுங்கள்..!

image

மாதுளை பழத்தை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மாதுளை பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலுள்ள பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் இதய நோய்களை தடுக்கும். மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும். எலும்பு தேய்மானத்தை தடுக்கும். தினமும் மாதுளை ஜுஸ் குடித்தால் மன அழுத்தம் குறையுமாம். SHARE IT.

News April 15, 2025

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திடீர் நீக்கம்

image

பகுஜன் சமாஜ் (BSP) மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தைக் கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையில் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார். மாநிலத் தலைவர் ஆனந்தன் மீது அண்மையில் பொற்கொடி புகார் கூறியிருந்தார்.

News April 15, 2025

விசுவாசுவ ஆண்டு எப்படி இருக்கும்?

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொடும் என விசுவாவசு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிர்லிங்க தலமான ராமேஸ்வரத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதில், தான் தங்கம் விலை அதிகரிக்கும், வைரம் விலை குறையும் என கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை புயல் தாக்கும். புதிய வைரஸ் நோய்கள் பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி

image

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 15, 2025

உக்ரைன் – ரஷ்யா போருக்கு இவரே காரணம்: டிரம்ப்

image

உக்ரைன் – ரஷ்யா போருக்கு இவர்தான் காரணம் என பைடனை கைகாட்டியிருக்கிறார் டிரம்ப். 2020 தேர்தல் முடிந்து அமெரிக்க அதிபராக பைடன் தேர்வானது தான் வரலாற்று பிழையாக மாறிப் போனதாகவும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த அவர் தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என விமர்சித்துள்ளார்.

News April 15, 2025

பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2025

சதுரகிரியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படுமா?

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் தினசரி சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணிப்பாறை மலையடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து மற்றும் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 15, 2025

பெண் வாக்காளர்களை கவர விஜய் புது வியூகம்!

image

2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக பெண் ரசிகர்களை வாக்காளர்களாக மாற்ற விஜய் வாய்ஸில் செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வாக்கு சேகரிக்க திட்டம் தீட்டி அதற்கான பணிகள் நடக்கிறது.

News April 15, 2025

அதிக புரதச் சத்தும் ஆபத்தாம்!

image

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உடலுக்கு புரதச் சத்தும் அப்படித் தான். அளவுக்கு அதிகமானால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரதங்களை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது தாகம் அதிகரித்து நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும். அது சிறுநீரகத்தை பாதிக்கும். மலச்சிக்கலை உண்டாக்கும். உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தும். நம் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் மட்டுமே புரதம் தேவை. சோ, ஃபாலோ பண்ணுங்க.

error: Content is protected !!