India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வரும் கட்சியினருக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. நிர்வாகிகள் சட்ட உதவிக்கு இவர்களை அணுகலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ₹499க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அரசு நேற்று அறிமுகம் செய்தது. *மஞ்சள் தூள் – 50g, * கடுகு – உளுத்தம்பருப்பு – 125g, சீரகம் 100g, வெந்தயம் 100g, சோம்பு 50g, மிளகாய் 250g, தனியா 500g, புளி 500g, உளுத்தம் பருப்பு 500g, கடலை பருப்பு 200g, பாசிப்பருப்பு 200g, வறுகடலை 200g, பெருங்காயத்தூள் 15g ஆகியவை அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகிறது.
திமுக கூட்டணி பலமாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறிய நிலையில், மலரைத் தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் தானாக வரும் என இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் ADMK நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தேசிய கட்சிகளே தங்களை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் யாருடைய அழுத்தமும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும் என்பதற்காகவே அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
‘தளபதி 69’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பிரச்னை காரணமாக காவல்துறையில் இருந்து வெளியேறும் விஜய், முக்கிய கேஸ் காரணமாக மீண்டும் போலீஸில் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் கதை பிண்ணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் போது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
கருப்பு கவுணி – புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
மாப்பிள்ளை சம்பா – நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மைக் கூடும்.
பூங்கார் – சுகப்பிரசவமாகும். தாய்ப்பால் ஊறும்.
இலுப்பைப்பூ சம்பா – பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
கருங்குறுவை – இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்.
கார் அரிசி – தோல் நோய் சரியாகும்.கருத்தக்கார் அரிசி – மூலம், மலச்சிக்கல் சரியாகும்.
உலகில் அதிக காற்றுமாசு உள்ள நகரங்களின் பட்டியலில், பாகிஸ்தானின் கராச்சி நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றுமாசு அளவு 232 AQI ஆகவுள்ளது. 2-ம் இடத்தில் நமது தலைநகரமான டெல்லி ( 204 AQI) உள்ளது. டாகர் (செனிகல்), கின்ஹாசா (DPR காங்கோ), டாக்கா (வ.தேசம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும், 9-ம் இடத்தில் கொல்கத்தாவும் (113 AQI) உள்ளன. முதல் சில நூறு இடங்களில் தமிழக நகரங்கள் இல்லை என்பது மகிழ்ச்சி தானே!
T20 WC Sub Regional Africa Qualifier Group B: காம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. T20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய காம்பியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ITI-களில் மாணவர்களின் நேரடி சேர்க்கை அக்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாள் செப்.30 வரை இருந்த நிலையில், அக்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ITI-களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ₹750, மிதிவண்டி, சீருடை, பயிற்சி கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியுடனான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்றது. 8 பெனால்டி கார்னர்கள், 1 பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய வீரர்கள் கோலாக மாற்ற தவறினர். 2014க்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டி டெல்லியில் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.
POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 802 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Jr Officer Trainee, Diploma Trainee உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Diploma, BA, BE, BBA, BBM, CA. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. தேர்வு முறை: எழுத்து தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. கூடுதல் விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.