India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Mens T20 Emerging Asia Cup 2024: இன்று நடந்த ஓமனுக்கு எதிரான போட்டியில் India A அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 15.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. IND சார்பில் ஆயுஷ் பதோனி 51, திலக் வர்மா 36* ரன்கள் எடுத்தனர்.
மரம் வளர்ப்பது மனித உயிரை காக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த சிரிக்கும் மனிதரின் புகைப்படம். ஆம்! பிலிப்பைன்ஸை சேர்ந்த எபிமாச்சோ அமஞ்சியோ 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரக்கன்றை நாட்டுள்ளார். இந்த சூழலில், 37 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது, அந்த மரம் தான் காப்பாற்றியுள்ளது. தான் நட்ட மரத்தின் முன் முதியவர் நின்று எடுத்த Photo வைரலாகிறது.
15 ஆண்டுகளுக்கு பின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார், அதற்காக பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள், படங்கள் வைரலானது. இது அவர் சினிமாவில் இருந்து விலகக்கூடும் என்ற ஊகத்தை கிளப்பியது. இந்நிலையில், ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும், அதனால் படங்களின் எண்ணிக்கையை குறைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!
ப்ரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், புனேரி பால்டன் அணியை TT எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் TT அணி, 35-30 என்ற புள்ளிகள் கணக்கில் PP அணியை வீழ்த்தியது. குறிப்பாக ஆல் அவுட் புள்ளிகள் 4, எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் 1 புள்ளி பெற்றது TT அணியின் வெற்றிக்கு உதவியது.
<<14435687>>உலகம் முழுவதும்<<>> ஏற்படும் மரணங்களில் 9-ல் ஒரு இறப்புக்கும், 7 கோடி premature மரணங்களுக்கும் காற்றுமாசு காரணமாக உள்ளது. காற்றில் மாசு அதிகரிக்கும் போது ஆஸ்துமா, புற்றுநோய், ஸ்ட்ரோக், நுரையீரல் பாதிப்புகள் உள்பட பல்வேறு நோய்கள் அதிகரிக்கிறது. மேலும், மனநிலை பாதிப்பு ஏற்படவும், நீரிழிவு அதிகரிக்கவும் காரணமாகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும் கூட ஆய்வுகள் தெரிவிக்கிறது.
தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வரும் கட்சியினருக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. நிர்வாகிகள் சட்ட உதவிக்கு இவர்களை அணுகலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ₹499க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அரசு நேற்று அறிமுகம் செய்தது. *மஞ்சள் தூள் – 50g, * கடுகு – உளுத்தம்பருப்பு – 125g, சீரகம் 100g, வெந்தயம் 100g, சோம்பு 50g, மிளகாய் 250g, தனியா 500g, புளி 500g, உளுத்தம் பருப்பு 500g, கடலை பருப்பு 200g, பாசிப்பருப்பு 200g, வறுகடலை 200g, பெருங்காயத்தூள் 15g ஆகியவை அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகிறது.
திமுக கூட்டணி பலமாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறிய நிலையில், மலரைத் தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் தானாக வரும் என இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் ADMK நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தேசிய கட்சிகளே தங்களை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் யாருடைய அழுத்தமும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும் என்பதற்காகவே அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
‘தளபதி 69’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பிரச்னை காரணமாக காவல்துறையில் இருந்து வெளியேறும் விஜய், முக்கிய கேஸ் காரணமாக மீண்டும் போலீஸில் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் கதை பிண்ணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் போது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.