news

News October 24, 2024

NTPC-இல் வேலைவாய்ப்பு.. உடனே APPLY

image

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜூனியர் executives பதவிகளில், ஓராண்டு கால பணிகால அடிப்படையில் 50 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் SC பிரிவினருக்கு 7, ST பிரிவினருக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

News October 24, 2024

மார்பக புற்றுநோய் நெருங்காமல் இருக்க…

image

மார்பக புற்றுநோயை தவிர்க்க சில உணவுகளை ரேடியோஜாலஜிஸ்ட் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
* உணவில் பூண்டை சேர்த்தால் மார்பக புற்றுநோய் வாழ்நாளிலும் ஏற்படாது * தினமும் காலை ப்ளூபெர்ரியை உட்கொண்டால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம் * சாலமன் மீன்களை உட்காெண்டால் தவிர்க்க முடியும் * மஞ்சளுக்கு மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மை உண்டு. SHARE IT

News October 24, 2024

மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

மத்திய அரசின் GRSEL நிறுவனத்தில் 236 காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. Trade அப்ரன்டிஸ், Graduate அப்ரன்டிஸ், Technician அப்ரன்டிஸ், HR Trainee ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலை, தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவலை www.grse.in இணையதளத்தில் காணலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். SHARE IT

News October 24, 2024

தினம் ஒரு திருக்குறள் (2)

image

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.

News October 24, 2024

BREAKING: தீவிர புயலாக வலுப்பெற்றது “டானா”

image

“டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் தீவையாெட்டி கரையை கடக்கும் என்றும் கணித்துள்ளது.

News October 24, 2024

58 வயதிலும் ஜொலிக்கும் நதியா

image

“பூவே பூச்சுடவா” மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நதியா, 1980களில் ரசிகர்களின் மனதில் உச்சத்தில் இருந்தார். அவரின் மாடல் உடையை காண்பதற்கென்றே ரசிகர்கள் வந்ததும் உண்டு. திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்தியிருந்த நதியா, தற்பாேது மீண்டும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்று 58ஆவது பிறந்தநாள் ஆகும். அவருக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிடுங்கள்.

News October 24, 2024

JIOவில் ₹999 ரீசார்ஜ்.. 98 நாள் கவலையில்லை

image

ஜியோ நிறுவனம் ₹999 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் பல சலுகைகளை வழங்குகிறது. அந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்தால், 98 நாள்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது. அத்துடன், தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 5ஜி சேவை பகுதி எனில் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான திட்டமாக இது கருதப்படுகிறது. SHARE IT.

News October 24, 2024

திலகரின் பொன்மொழிகள்

image

* சுயராஜ்யம் என்பது எனது பிறப்புரிமை, அதை நான் பெற்றே தீருவேன்
* நமது தேசம் ஒரு மரத்தைப் போன்றது, அதன் அசல் தண்டு சுயராஜ்யம் ஆகும். அதன் கிளைகள் சுதேசி மற்றும் புறக்கணிப்பு
* கடவுள் தீண்டாமையை பொறுத்துக் கொண்டால், நான் அவரைக் கடவுள் என்று சொல்ல மாட்டேன்
* பிரச்சனையே வளங்கள் அல்லது திறன் இல்லாதது அல்ல, துணிச்சல் இன்மையே ஆகும். SHARE IT.

News October 24, 2024

ஆர்சிபி அணிக்கு மாறுகிறாரா பண்ட்?

image

IPL அணி வீரர்களில் யார் யாரை தக்க வைப்பது என நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. இதுகுறித்து விரைவில் அந்நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பண்ட் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோல் அவர் நீக்கப்பட்டால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அவர் மாறக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை.

News October 24, 2024

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

image

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.

error: Content is protected !!