news

News October 24, 2024

டாஸ்மாக் முன் செல்ஃபி.. போலீசாருக்கு புதிய உத்தரவு

image

பணியிடத்தில் சீருடையுடன் செல்ஃபி எடுத்து உயரதிகாரிக்கு அனுப்ப போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் பணியிடங்களுக்கு போலீசார் குறித்த நேரத்தில் செல்வதில்லை என புகார்கள் எழுகின்றன. இதனால், பணியிடங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 10 மணிக்கு TASMAC கடை மூடியதும் அதன் முன்பு செல்ஃபி எடுத்து உயரதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்புகின்றனர்.

News October 24, 2024

யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா

image

உலக வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இன்று உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதை பயன்படுத்தி யார் மீதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தாது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. எனவே, அமெரிக்காவோ, சீனாவோ யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என பெருமிதத்துடன் பேசினார்.

News October 24, 2024

3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

News October 24, 2024

குரு தோஷம் நீங்க… இதை செய்யுங்கள்!

image

ஜாதகத்தில் தனகாரகன் குரு வலுக்குன்றி, நீசம் பெற்றிருந்தால் பாதகமான குரு தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை ரதசப்தமியன்று சென்னை போரூரில் ராமநாதீஸ்வரர் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஒரு செம்பு நாணயத்தை தலையை மூன்று முறை சுற்றி, குளத்தில் வீச வேண்டும். மஞ்சள் நிற வஸ்திரம், மாலை அணிவித்து, இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி குரு காயத்ரி மந்திரம் பாடி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என ஐதீகம்.

News October 24, 2024

தவெக மாநாட்டில் இணையும் பிரபலங்கள்

image

ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கி வருகின்றனர். இந்த மாநாட்டில் விஜய் கட்சியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபல நடிகர்கள் பலரும் இணைய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் யார் என்பது மாநாடு நடக்கும்போது தான் தெரியும் என தவெக நிர்வாகிகள் சஸ்பென்ஸ் வைக்கின்றனர்.

News October 24, 2024

செல் எண் இல்லாமலேயே, ஆதார் டவுன்லோடு முறை

image

ஆதாருக்கு விண்ணப்பிக்கையில் அளித்த மொபைல் எண் இல்லையென்றாலும், அதை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கு UIDAI இணையதளத்துக்கு சென்று, MY SUPPORT என்ற பகுதியை கிளிக் செய்து, ஆதார் PVC CARD என்பதை அழுத்தி, ஆதார் எண்ணை உள்ளிட்டு, MY MOBILE NUMBER IS NOT REGISTERED என்பதற்குள் செல்ல வேண்டும். அங்கு மாற்று செல் எண்ணை உள்ளிட்டு, அதில் வரும் OTP-யை பதிவிட்டால் ஆதார் பதிவிறக்கம் ஆகும்.

News October 24, 2024

இந்த பாஸ்வேர்ட்டுகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்

image

மின்னஞ்சல், கணினிகள், மொபைல்களில் குறிப்பிட்ட 10 பாஸ்வேர்டுகளை மட்டும் பயன்படுத்த வேண்டாம் என்றும், அப்படி அதை பயன்படுத்தினால் ஹேக்கிங் அபாயம் உள்ளதென்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த பாஸ்வேர்டுகளை இங்கு காணலாம். * 123456 * admin * 12345678 * 123456789 * 1234 * 12345 * password * 123 * Aa123456 * 1234567890. இந்தத் தகவல் உங்களுக்கு பயனளித்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 24, 2024

நியூசி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று 2ஆவது டெஸ்ட்

image

இந்தியா, நியூசி. இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி, புனேயில் இன்று தொடங்குகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் நியூசி. அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் 2ஆவது டெஸ்டில் வென்று நியூசி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

News October 24, 2024

ATM அட்டையில் 16 எண்கள்.. என்ன அர்த்தம் தெரியுமா?

image

ATM-ன் முன்பகுதியில் உள்ள 16 எண்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். முதலில் உள்ள 6 எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETC) நிறுவன அடையாள எண் ஆகும். அதையடுத்து 7 முதல் 15 வரையிலான எண்கள், வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்குடன் தொடர்புடைய எண் ஆகும். 16ஆவது எண் CHECK DIGIT எண் ஆகும். அதாவது, அந்த அட்டை செல்லுமா, காலாவதியாகி விட்டதா என்பதை அறிய உதவும். SHARE IT.

News October 24, 2024

NTPC-இல் வேலைவாய்ப்பு.. உடனே APPLY

image

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜூனியர் executives பதவிகளில், ஓராண்டு கால பணிகால அடிப்படையில் 50 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் SC பிரிவினருக்கு 7, ST பிரிவினருக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

error: Content is protected !!