news

News April 15, 2025

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

image

பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் <<16081235>>MLA <<>>உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது <<16095694>>அதிருப்தி <<>>அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக சிறுபான்மையினர் அணியின் முக்கிய நிர்வாகி கே.எஸ்.முகமது கனி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 15, 2025

இரண்டாக உடையும் மதிமுக?..வைகோ சமரசம்

image

மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி 2ஆக பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ஆம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.

News April 15, 2025

மீண்டும் அணிக்கு திரும்பும் மயங்க் யாதவ்

image

தனது வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் கடந்த சீசனில் அசத்தியவர் மயங்க் யாதவ். இதனால் அவரை லக்னோ அணி ₹11 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் லக்னோ அணியில் இதுவரை இணையாமல் இருந்தார். தற்போது அவருக்கு காயம் குணமடைந்துவிட்டதால் நாளை லக்னோ அணியுடன் மயங்க் இணைய உள்ளார். 6 போட்டியில் 4 வெற்றியை பதிவு செய்துள்ள LSG-க்கு மயங்க் வருகை மேலும் வலுசேர்க்கும்.

News April 15, 2025

வரலாற்றில் இன்று!

image

➤உலக கலை நாள்
➤சர்வதேச பண்பாட்டு நாள்
➤1995 – தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு தினம்
➤1865 – அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவு தினம்
➤1977 – இந்திய சிற்பி சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள்

News April 15, 2025

ரேஷனில் கண்விழியும் பதியலாம்.. KYC-ல் புதிய வசதி

image

<<16090104>>ரேஷன்<<>> அட்டைதாரர்களின் KYC பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் 90% வரை பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வயதானோரால் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயனாளர்களின் கண் விழித்திரையை ஸ்கேன் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மோகன் கூறியுள்ளார்.

News April 15, 2025

எனக்கு எதுக்கு Award .. தோனி

image

LSG-க்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தோனிக்கு சிறந்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய தோனி, எனக்கு ஏன் விருது கொடுத்தார்கள் என்று ஒன்னும் புரியவில்லை. எங்கள் அணியில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது தான், இந்த விருதுக்கு தகுதியானவர் என்று தோனி பதிலளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இதனால தான் சார் அவரு தல! என்று கமெண்ட் செய்கின்றனர்.

News April 15, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள் ▶பகை, பொறாமையை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேரும் ▶பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது ▶ வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

News April 15, 2025

அன்புமணிக்கு அட்வைஸ் கொடுத்த துரை வைகோ

image

பாமகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணிக்கு துரை வைகோ அட்வைஸ் செய்துள்ளார். ராமதாஸின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்னையை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். அதுதான் அக்கட்சிக்கும் நல்லது. அதே சமயம் தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

News April 15, 2025

IPL தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப் வீரர்

image

பஞ்சாப் அணி வீரர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு IPL சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். SRH-க்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நிலையில் அவர் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி இந்தாண்டாவது அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

error: Content is protected !!