India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வழுக்கை தலையில் முடியை வளர்த்தது எப்படி என USA பணக்காரர் பிரையன் ஜான்சன் (46) பகிர்ந்துள்ளார். முடி உதிர்வு தொடங்கியதுமே சிகிச்சையை ஆரம்பித்ததாகவும், கடந்த ஓராண்டாக செய்த தொடர் முயற்சியால் தற்போது முடி வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மரபணுவுக்கு ஏற்றார்போல் புரதங்கள், Omega-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் முடி வளர உதவியதாக தெரிவித்துள்ளார்.
‘Tarzan’ நடிகர் ரோன் ஈலய் (86) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் கிர்ஸ்டன் தனது சமூகவலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த உலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 1960ல் வெளியான ‘Tarzan’ ஹாலிவுட் டிவி தொடர் மூலம் அவர் உலகளவில் ஃபேமஸானார். 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், கடந்த 2001ஆம் ஆண்டில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். பின் எழுத்தாளராக அறியப்பட்டார்.
மெரினா பீச்சில் போலீஸிடம் அட்ராசிட்டி செய்த ஜோடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இரவு 12 மணிக்கு மேல் பீச்சில் இருக்கக்கூடாது எனக் கூறிய போலீஸாரை பார்த்து, பல்லி மூஞ்சி, வையாபுரி மூஞ்சி என அவர்கள் கிண்டல் செய்த வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கோரி தனலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தான் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.
NTRO நிறுவனத்தில், பொது மத்திய சிவில் சேவை துறையில் காலியாகவுள்ள 75 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B பிரிவு ஆராய்ச்சியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹56,100 – ₹1,77,500. கல்வித்தகுதி: Any UG & PG Degree. தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.8. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. தொடர்ந்து, நாளையும் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் கூறியுள்ளது.
இன்று 10 மணிக்கு <<14438881>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சத்யமேவ ஜெயதே 2) கொசு 3) 1971 4) இங்கிலாந்து 5) மலைபடுகடாம் 6) டைட்டோனி பறவை 7) National Eligibility Test 8) M.S.சுப்புலட்சுமி. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவரான PT உஷாவுக்கும், அதன் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது தெரிந்ததே. அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் 25ஆம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், அந்த கூட்டம் PT உஷாவின் உத்தரவின் பேரில் நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏலாதி என்பது சித்த மருத்துவ நூல்களில் கூறப்படும் ஒரு வகைச் சூரணமாகும். ஏலம், லவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு உள்ளிட்ட 6 பொருள்கள் சேர்ந்த மருந்தாகும். அதுபோல் ஏலாதி நூலும் ஒவ்வொரு 4 அடி பாடலிலும் 6 பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையாக அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை பெற்றமையால் இப்பெயரைப் பெற்றது. இந்நூலை சங்கம் மருவிய காலத்தில் கணிமேதாவியார் (சமணர்) இயற்றியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா நேற்று தனது 11 பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, இணையத்தில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றை பார்த்த பலரும் நமக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்று புலம்பும் அளவுக்கு குழந்தையாக பார்த்த ஆராதனா, தற்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார். 2018ல் வெளியான கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மழலை குரலில் பாடி நம் வீட்டு தேவதையாக மனதைக் கவர்ந்தார்.
பெரும்பாலான ஹாஸ்பிடல்களில் டாக்டர்களின் இடதுபுறத்திலேயே நோயாளிகள் அமர வைக்கப்படுகிறனர். நோயாளிகளின் இதயம், வயிறு, கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளை டாக்டர்கள் வலதுபுறத்தில் இருந்து எளிமையாக பரிசோதிக்க இது வழிவகுக்கிறது. மேலும், பெரும்பாலான மருத்துவர்கள் வலதுகை பழக்கமுடையவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதன் பின்னணியில் எவ்வித அறிவியல் காரணங்களும் இல்லை.
Sorry, no posts matched your criteria.