India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL அணிகள் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் பட்டியலை, வரும் 31ஆம் தேதிக்குள் வெளியிட BCCI உத்தரவிட்டுள்ளது. ஆனால், 28ஆம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என CSK நிர்வாகத்திடம் தோனி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், வரும் 29 (அ) 30ஆம் தேதிகளில் தோனியை சந்தித்து பேச CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகே அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியவரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் சாம்பியனானது. 2வது இடத்தில் செங்கல்பட்டு, கோவை 3, சேலம் 4, ஈரோடு 5வது இடத்தை பிடித்துள்ளன. திண்டுக்கல், நெல்லை, திருவள்ளூர், மதுரை, குமரி மாவட்டங்கள் முதல் 10 இடங்களை பெற்றுள்ளன. இதில் உங்கள் மாவட்டம் எந்த இடத்தில் உள்ளது?
ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் <
ஃபகத் ஃபாசில், வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. கிருஷ்ண மூர்த்தி இந்த படத்தை இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘Road Comedy’ ஜானரில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகவும், லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
புனேவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சௌதி பந்தில் 2 ரன்னுக்கு போல்டான கேப்டன் ரோஹித், இந்த முறையும் சௌதி பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் போல்டானார். ஜெய்ஷ்வால் 6*, கில் 10* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில், விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீனவர்களிடம் வழங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழனம் என்பது மரபினம் இல்லை, அது தேசிய இனம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறக்கூடாது, அவ்வாறு மாறினால் அது இனவாதத்தில் முடிந்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார். திராவிடம் என்பது தேசிய இனம் இல்லை, பல தேசிய இனங்களை உள்ளடங்கிய மரபினம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சில கட்சிகள் அதில் குழப்பம் விளைவித்து ஆதாயம் அடைய பார்ப்பதாகவும் விமர்சித்தார்.
ஜல்லிக்கட்டு படத்தில் அவரது ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ கேரக்டரில் நடித்து, பட்டித்தொட்டி எல்லாம் பேமஸ் ஆனவர் கருப்பு சுப்பையா. இந்நிலையில், கட்டபொம்மன் படத்தில் அவருக்கு கவுண்டமணி ஈயம் பூசுவது போல ஒரு சீன் வரும். அதில் அவர் மீது பெயிண்ட் பூசப்பட்டது. இதற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.300. ஆனால், பெயிண்ட் அடித்ததால் வியர்வை வெளியேறாமல், ரத்தத்தில் கழிவுகள் கலந்து சில ஆண்டுகளிலேயே அவர் இறந்தார்.
1) உடலில் 85% ரத்தத்தை தண்ணீர் உருவாக்குகிறது. 2) 75% தசைகளை உருவாக்குகிறது. 3) உணவில் உள்ள சத்துகளை உடல் உறிவதற்கு தண்ணீர் மட்டுமே ஒரே மருந்து. 3) உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. 4) 22% எலும்புகளை உருவாக்குகிறது. 5) ஆக்சிஜனை நாம் சுவாசிக்க ஏதுவாக அதை ஈரப்பதம் ஆக்குகிறது. 6) உணவை ஆற்றலாக எரிக்கிறது. 7) கை, கால் மூட்டுகள் நம் தசைகளை குத்தாதவாறு குஷனை ஏற்படுத்துகிறது. Share It
Sorry, no posts matched your criteria.