news

News October 24, 2024

கனமழை: இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

image

கனமழை காரணமாக குமரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்திற்கு நாளையும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

இந்தியாவின் விளையாட்டு தலைநகர் தமிழகம்: உதயநிதி

image

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருவதாக துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு சிரத்தையோடு செய்து வருவதாகவும் கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.83 கோடி முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

News October 24, 2024

துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா?

image

திருமணமான இந்தியர்களில் 55% பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்றும், இவர்களில் பெண்கள் (56%) தான் அதிகம் எனவும் பிரபல டேட்டிங் ஆப் கிளீடன் முன்பு நடத்திய சர்வேயில் தெரிய வந்தது. இதே ஆப் அண்மையில் நடத்திய சர்வேயில் பங்கேற்ற மணமானவர்களில் 60% பேர், டேட்டிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பிணைப்பு பலவீனமடைகிறதா.. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News October 24, 2024

கல்வித்துறை உள்கட்டமைப்பு மாறுகிறது: எல்.முருகன்

image

தேசிய கல்விக் கொள்கையால் கல்வித்துறையின் உள் கட்டமைப்பு மாறி வருவதாக, எல்.முருகன் கூறியுள்ளார். பன்முகத் தன்மை கொண்ட கல்வியை, மன ஆரோக்கிய முயற்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை தேவைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதே NEP எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அளவில் இந்திய இளைஞர்கள் போட்டி போட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கல்வித்துறையில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

News October 24, 2024

நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

image

மலேசியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் படுத்த படுக்கையானார். மனம் தளராத அவரது மனைவி 6 ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். அண்மையில் உடல்நலம் தேறிய கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துள்ளார். அந்த பெண்ணோ, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என கணவனை வாழ்த்தினாலும், ‘நன்றி கெட்டவன்’ என அந்நபரை நெட்டிசன்கள் திட்டுகின்றனர்.

News October 24, 2024

புதுசு புதுசாக Record பதிக்கும் தமிழன்

image

நியூசி., அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் மொத்தம் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து நாதன் லயன் 187 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

News October 24, 2024

சந்திரசூட் மீது துஷ்யந்த் தவே கடும் விமர்சனம்

image

உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தை CJI சந்திரசூட் சிதைத்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அதிகம் தெரியக்கூடிய நபராகவும், விளம்பரத்தை விரும்புபவராகவும் சந்திரசூட் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது 46 வருட வழக்கறிஞர் அனுபவத்தில் இது போல் இதற்கு முன்பு தலைமை நீதிபதியை பார்த்தது இல்லை என்றும், இது முற்றிலும் தவிர்க்க வேண்டியது எனவும் சாடியுள்ளார்.

News October 24, 2024

எந்த மாநிலத்தில் வறுமை அதிகம்?

image

இந்தியர்களின் வறுமைநிலை பற்றி மத்திய புள்ளிவிவர துறை வெளியிட்டுள்ள படம் அதிகம் பகிரப்படுகிறது. 2022-23 ஆண்டில், ஒருநாள் வருமானம் 3.2 டாலருக்கு (ரூ.270) குறைவாக உள்ளவர்கள், வறுமையில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, மே.வங்கத்தில் 35.2% பேர், உபி (32.1%), மகாராஷ்டிரா, (34.9%), குஜராத் (21.8%), கேரளா(16%) என பட்டியல் நீள்கிறது. தமிழகத்தில் வெறும் 5.8% பேர் வறுமையில் உள்ளனர். Image:India Today

News October 24, 2024

காய்கறியும்! பெண்மையும்!!

image

கர்ப்பப்பையை கர்ப்பக்கிரஹமாக்க – தேங்காய்
வலியில்லாத மாதவிடாய்க்கு – கொத்தவரை
மலடை மலடாக்கி பெண்ணை தாயாக்க – கத்திரிக்காய்
முடிவில்லா போக்கை முடித்து கட்டிட – வெண்பூசணி
தாமதமாகும் போக்கை முறித்துவிட துடிக்கும் – முருங்கைக்காய்
அதிக ரத்தப்போக்கிற்கு நிவாரணம் – வாழைக்காய்
அதிக வெள்ளைப்போக்கிற்கு பரிகாரம் – கோவைக்காய் தடையில்லாமல் தாய்ப்பால் சுரந்திட – புடலங்காய்

News October 24, 2024

டாலருக்கு ஆப்பு வைக்கப் போகும் பிரிக்ஸ் கரன்சி

image

பிரிக்ஸ் நாடுகள் இடையே பணப் பரிமாற்றத்துக்கு பொதுவான கரன்சியை உருவாக்குவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு அடையாளமாக, நடந்துமுடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் “BRICS banknote”-ஐ காட்டினார். அதில் பிரிக்ஸ் அமைப்பை நிறுவிய இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தெ.ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கொடிகள் இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது. டாலரின் ஆதிக்கத்தை பிரிக்ஸ் கரன்சி தகர்க்குமா?

error: Content is protected !!