India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இவை முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *பொதுவான விழுமியங்கள் இல்லாதது *வாழ்க்கை முன்னுரிமைகளில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *‘த்ரில்’ தேடும் மனநிலை *புறக்கணிப்பு (அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பு சிரமம். வேறு காரணங்கள்?
ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். குல்மார்க் அருகே உள்ள போடாபதேர் பகுதியில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, குமரி, நெல்லையில் இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேரை தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இந்தாண்டில் சேர்த்து இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஹேமந்த சோரனும், அவரின் மனைவி கல்பனாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 81 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நவ.13 மற்றும் நவ.20இல் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியிலும், கல்பனா சோரனும் காண்டே தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஜேஎம்எம் தேர்தல் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய மலையேற்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த <
புழுங்கல் அரிசி, பட்டைத்தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 10% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விலக்கு தரப்பட்டதுடன் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் MLA தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைய அனுமதியுடன் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
➤மேஷம் – தடங்கல் ➤ரிஷபம் – நஷ்டம்
➤மிதுனம் – வெற்றி
➤கடகம் – ஆர்வம்
➤சிம்மம் – புகழ்
➤கன்னி – சுபம்
➤துலாம் – தோல்வி
➤விருச்சிகம் – பயம்
➤துனுசு – லாபம்
➤மகரம்- களிப்பு
➤கும்பம் – வரவு ➤மீனம் – காரியசித்தி
இபிஎஸ் கனவில்தான் முதல்வர் ஆவார் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் வரை இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர்ந்தால், தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என்றும், அதிமுக என்ற கட்சியே அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அது 2026 தேர்தலில் வெளிப்படையாக தெரியவரும் என்றார்.
ப்ரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், UP யோத்தாஸ் அணியை BW எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் BW அணி, 32-29 என்ற புள்ளிகள் கணக்கில் UPY அணியை வீழ்த்தியது. குறிப்பாக ஆல் அவுட் புள்ளிகள் 2, எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் 1 புள்ளி பெற்றது BW அணியின் வெற்றிக்கு உதவியது.
Sorry, no posts matched your criteria.