India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழத்தைச் சேர்த்தால் ருசியாக இருக்கும். ➤பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது. ➤ஜவ்வரிசியை சூடான தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும். ➤வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது. ➤பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும். ➤குழம்பு மிளகாய் தூளில் பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
உதயநிதி துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாகவும், இதுதான் தமிழ் மொழியை காக்கும் லட்சணமா எனவும் அவர் வினவியுள்ளார். மேலும் ஆளுநர் மீது இனவெறி சாயம் பூசிய உங்கள் தகப்பனார், இப்போது உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனவும் கேட்டுள்ளார்.
அழிந்துபோன உயிரினங்களான டைனோசர் மற்றும் மீன் இனங்களை ரோபோக்களாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதன் மூலம் பரிணாம வளர்ச்சி பற்றி மேம்பட்ட புரிதலை அடைய முடியும் எனவும், பல ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்த உயிர்களை, சில கோடிங் அல்லது 3D பிரிண்டிங்கால் ஒரே நாளில் நம்மால் உருவாக்க முடியும் எனவும் Cambridge பல்கலைக்கழக பேராசிரியர் Dr.மைக்கேல் இஷிடா தெரிவித்துள்ளார்.
TNPSC 6 ஆட்தேர்வு இனி கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் – குரூப் 1-B, 1-C, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (இன்டர்வியூ வேலைகள்), (இன்டர்வியூ அல்லாத வேலைகள்), ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (DIPLOMA, ITI), உதவி அரசு வழக்கறிஞர்கள் கிரேட் 2 ஆகியவை கணினி வழியில் நடத்தப்படும் என்று TNPSC குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய கேப்டன் லாதம் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 4, அஷ்வின் 1 விக்கெட்டை கைப்பற்றினர். நியூசி., 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
‘கங்குவா 2’-ஆம் பாகத்திற்கான பணிகள் 2026-ல் முடிவடைந்து 2027-ல் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இயக்குநர் முதலில் 2 பாகங்களாக எடுக்க திட்டமிட்டதாகவும், ஆனால் தற்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான பின் கதையை கூறி Web Series-க்கான ஐடியாக்களை கூறிவருவதையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி ரத்தமும், சண்டையுமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் மிக குறைந்த வயதில் (22) டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு வரை இந்த சாதனையை திலீப் வெங்சர்க்கார் (23 வயது, வருடம் 1979) தன்வசம் வைத்திருந்தார். 45 ஆண்டுகளுக்கு பின் அவரது சாதனையை முறியடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.
தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சி.வி. சண்முகத்தை
போலீசார் கைது செய்தனர்.
உதயநிதி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாகக் கூறி இனவாத கருத்தை முன்வைத்த திமுக, இதற்கு என்ன பதில் கூறப்போகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல இதனை கடந்து செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள், தேசிய போட்டிகளில் பங்கேற்றால் ₹25,000, சர்வதேச போட்டிகளுக்கு ₹50,000 நிதியுதவி வழங்குகிறது. பங்கேற்கும் ஆண்டில் மட்டும் ஒரு முறை அந்த நிதி வழங்கப்படும். இதற்கு, அரசு அங்கீகரித்த 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.