India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வு காண்பதற்கான திட்டத்தை இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் வகுக்கும்படி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டம் 29ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதும், அதில் தமிழக அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ், ஜிஐஎஸ் ஆகியவை நேர மேலாண்மை, புவி ஆராய்ச்சிக்கு பயன்படும் தொழில்நுட்பங்கள் ஆகும். அவைகள் இடையேயான வித்தியாசத்தை அறிவோம்.
1) ஜிபிஎஸ் – ஜிபிஎஸ் என்பது செயற்கைக்கோள் மூலம் வழிகாட்டும் அமைப்பு ஆகும். இடம் குறித்த துல்லியமான தகவல், பூமியின் நேரத்தை அது தரும்.
2) ஜிஐஎஸ்: புவி குறித்த தரவை சேகரிக்க, சேமிக்க, மேலாண்மை செய்ய பயன்படுத்தப்படும் கணினியை அடிப்படையாக கொண்ட அமைப்பு.
பாஜக எதிர்பார்ப்பதையே சீமான் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என பாகுபடுத்தி சீமான் பேசுவது சரியான விவாதமும் இல்லை, லாஜிக்கும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பது இபிஎஸ் வேட்கையாக இருக்கலாம் என்று கூறியுள்ள திருமாவளவன், ஆனால் அதுபோல் விரிசல் விழாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஏஜெண்டு என்று திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை காட்டிலும், திமுகவை மட்டுமே குறிவைத்து சீமான் அதிகமாக விமர்சித்து வருவது குறித்து மனோ தங்கராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சீமான் ஆர்எஸ்எஸ்., பாஜகவின் ஏஜெண்டு. ஆதலால் அவர்களை விமர்சிக்க மாட்டார் என்று பதிலளித்தார்.
கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் இன்றும் வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்கள்.
தொடரி படத்தில் இணைந்து நடித்த தனுஷ், கீர்த்தி சுரேஷ், அதன்பிறகு எந்த படங்களிலும் ஜோடியாக நடிக்கவில்லை. இந்நிலையில் 2 பேரும் புதிய படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படம் ஆக்சன் கதையம்சம் கொண்ட படமென்றும், படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியம் தரப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
* எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள் * பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த மனிதனிடம் வாதிடுவது, செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும் * நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் * கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனது இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது. SHARE IT
துர்க்கை தேவியின் 9 வடிவங்களை தெரிந்து கொள்வோம்.
1) வன துர்க்கை
2) சூலினி துர்க்கை
3) ஜாதவேதோ துர்க்கை
4) சாந்தி துர்க்கை
5) சபரி துர்க்கை
6) ஜ்வாலா துர்க்கை
7) லவண துர்க்கை
8) தீப துர்க்கை
9) ஆசுரி துர்க்கை.
கர்ப்பிணிகள் படுக்கையில் எப்படி தூங்குவது என மருத்துவர்கள் தரும் ஆலோசனையை தெரிந்து கொள்வோம். கர்ப்பிணிகள் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கும்போது, பெரிய ரத்தக்குழாய்களான அயோடா, இன்ஃபிரியர் வீணாக்கேவாவில் அழுத்தம் குறையும். இதனால், கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். விளைவு, தொப்புள் கொடி வழியாக தேவையான ரத்தம் செல்வதால், குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்தநாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1943 – நாஜிக்களுக்கு எதிராக டச்சு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
*1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்தநாள்
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
Sorry, no posts matched your criteria.