news

News April 15, 2025

பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2025

சதுரகிரியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படுமா?

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் தினசரி சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணிப்பாறை மலையடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து மற்றும் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 15, 2025

பெண் வாக்காளர்களை கவர விஜய் புது வியூகம்!

image

2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக பெண் ரசிகர்களை வாக்காளர்களாக மாற்ற விஜய் வாய்ஸில் செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வாக்கு சேகரிக்க திட்டம் தீட்டி அதற்கான பணிகள் நடக்கிறது.

News April 15, 2025

அதிக புரதச் சத்தும் ஆபத்தாம்!

image

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உடலுக்கு புரதச் சத்தும் அப்படித் தான். அளவுக்கு அதிகமானால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரதங்களை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது தாகம் அதிகரித்து நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும். அது சிறுநீரகத்தை பாதிக்கும். மலச்சிக்கலை உண்டாக்கும். உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தும். நம் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் மட்டுமே புரதம் தேவை. சோ, ஃபாலோ பண்ணுங்க.

News April 15, 2025

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்

image

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 – ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. குமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15,000 படகுகள் கடலுக்கு செல்லாது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடியில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

News April 15, 2025

இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க…

image

இப்பழக்கங்கள் உங்களை ஏழையாக மாற்றும் *எந்த ஒரு பொருளை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தேவையில்லாத ஷாப்பிங் *வீட்டில் உணவு இருக்கும் போதும் அடிக்கடி வெளியில் சாப்பிடுவது *புகைபிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையானால் கணக்கு தெரியாமலே அதிகமாக செலவிடுவோம் *மளிகை சாமானை அதிகளவில் தேவையில்லாமல் வாங்கி குவிப்பது. இப்பழக்கங்களை மாற்றுங்கள்.

News April 15, 2025

அண்ணாமலை பாஜகவின் சொத்து: நயினார் நாகேந்திரன்

image

அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்றும் அவரை யாரும் வெளியேற்ற முடியாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி இழுபறி இல்லாமல் அமைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதிமுக உடனான கூட்டணிக்காகவே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2025

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஏப்.15) திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது. அதேநேரம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10.31 மணிக்குத் தொடங்கி 11.30 மணிக்குள் நிறைவடைய உள்ளது.

News April 15, 2025

9 செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால்….

image

9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.

News April 15, 2025

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹1000

image

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000 வரவு வைக்கப்படவுள்ளன. அதே நேரம், மேல்முறையீடு செய்த பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!