news

News October 25, 2024

எத்தனை மணிக்கு சாப்பிடலாம்?

image

இரவு உணவை, நமக்கு கிடைக்கும் நேரத்தில், சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்போம். ஆனால், தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு சாப்பிடுவதே சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி செய்வதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயில் சென்று அதனால் ஏற்படும் உடல்நல பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கிறார்கள். மேலும், சாப்பிட்ட உடனே தூங்குவதால் அஜீரணம், தூக்கமின்மை ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.

News October 25, 2024

தீபாவளி இனிப்பு : பேக்கரிகளுக்கு உத்தரவு

image

தீபாவளியையொட்டி பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமான முறையில் விற்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது, தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் காலாவதி தேதி, தயாரிப்பு இடம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும். வெளிப்புறங்களில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் முறையாக லைசன்ஸ் பெற்று தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 25, 2024

பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தவெக

image

எம்.பி தேர்தலுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் என்ற முகவரியில் தவெக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 25, 2024

பூகம்பத்தை எப்படி அளவிடுகிறார்கள்?

image

நிலநடுக்கத்தை அளவிட ரிக்டர் அளவு கோல் பயன்படுத்தப்படுவது பலரும் அறிந்ததே. இதை அளக்க Seismometer பயன்படுகிறது. பூகம்பத்தின்போது நிலத்தின் மீது உணரப்படும் அதிர்வானது, அந்த கருவியில் உள்ள மார்க்கர் மூலமாக காகித சுருளில் துல்லியமாக பதிவாகும். பூமிக்கடியில் தோன்றும் அழுத்தம் & தளத்தட்டுகளின் நகர்வுகளுக்கு ஏற்ப தீவிரம், நில அதிர்வுகளின் நீளம், வீச்சானது மடக்கையில் கணக்கிடப்பட்டு (1-10) அளவிடப்படுகிறது.

News October 25, 2024

கண்டனம் தெரிவித்தாலும் போதாது: பிரியங்கா

image

ஜம்மு&காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், ஒரு நாகரீக சமூகத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவத்திற்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தாலும் அது போதாது என்றும் கூறியுள்ளார். குல்மார்க் பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

News October 25, 2024

Youtube கிரியேட்டர்களுக்கு ஜாக்பாட்..!

image

இந்திய கன்டெண்ட் கிரியேட்டர்களுக்கென Shopping Affiliate திட்டத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இனி ஃபிளிப்கார்ட், மிந்த்ரா ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் பொருள்களை, கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களில் டேக் செய்யலாம். வீடியோவை பார்ப்பவர்கள் அந்த பொருட்களை வாங்கும்போது, கிரியேட்டர்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்த வசதி அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

News October 25, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழத்தைச் சேர்த்தால் ருசியாக இருக்கும். ➤பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது. ➤ஜவ்வரிசியை சூடான தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும். ➤வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது. ➤பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும். ➤குழம்பு மிளகாய் தூளில் பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

News October 25, 2024

உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?: வானதி

image

உதயநிதி துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாகவும், இதுதான் தமிழ் மொழியை காக்கும் லட்சணமா எனவும் அவர் வினவியுள்ளார். மேலும் ஆளுநர் மீது இனவெறி சாயம் பூசிய உங்கள் தகப்பனார், இப்போது உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனவும் கேட்டுள்ளார்.

News October 25, 2024

Wow: மீண்டும் உலகிற்கு வரும் டைனோசர்..!

image

அழிந்துபோன உயிரினங்களான டைனோசர் மற்றும் மீன் இனங்களை ரோபோக்களாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதன் மூலம் பரிணாம வளர்ச்சி பற்றி மேம்பட்ட புரிதலை அடைய முடியும் எனவும், பல ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்த உயிர்களை, சில கோடிங் அல்லது 3D பிரிண்டிங்கால் ஒரே நாளில் நம்மால் உருவாக்க முடியும் எனவும் Cambridge பல்கலைக்கழக பேராசிரியர் Dr.மைக்கேல் இஷிடா தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

இனி இவைகளுக்கு கணினி வழித் தேர்வு..TNPSC அறிவிப்பு

image

TNPSC 6 ஆட்தேர்வு இனி கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் – குரூப் 1-B, 1-C, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (இன்டர்வியூ வேலைகள்), (இன்டர்வியூ அல்லாத வேலைகள்), ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (DIPLOMA, ITI), உதவி அரசு வழக்கறிஞர்கள் கிரேட் 2 ஆகியவை கணினி வழியில் நடத்தப்படும் என்று TNPSC குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!