news

News September 25, 2024

BREAKING: தங்கம் விலை ₹480 அதிகரிப்பு

image

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹480 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹7,000ஆகவும், 1 சவரன் தங்கம் ₹56,000ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ₹60 அதிகரித்து ₹7,060 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ₹480 உயர்ந்து ₹56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.

News September 25, 2024

கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது வோடாபோன்?

image

இந்தியாவில் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் கட்டணங்களை வோடாபோன் ஐடியா (Vi) மீண்டும் உயர்த்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிறுவன சிஇஓ அக்ஷய முந்த்ரா இதுகுறித்து பேசுகையில், வோடாபோன் ஐடியா நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் 2025 மத்தியில் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், Vi 10%- 25% வரை கட்டணம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2024

காருக்குள் இருந்து 5 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

image

புதுக்கோட்டை அருகே காருக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமனசமுத்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 5 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகே முழு விவரமும் தெரிய வரும்.

News September 25, 2024

ODI: ஆஸி. தாெடர் வெற்றிக்கு இங்கி. முற்றுப்புள்ளி

image

ODIஇல் தொடர்ந்து 14 போட்டிகளில் வென்ற ஆஸி.யின் சாதனைக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலில் பேட் செய்த ஆஸி., 304 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. 37.4 ஓவர்களில் 254 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தபோது மழையால் போட்டி தடைபட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 46 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் புரூக் 110 ரன் அடித்து அசத்தினார்.

News September 25, 2024

விஜய் கட்சிக்கு ஆதரவா? யுவன் பதில்

image

விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு யுவன்சங்கர் ராஜா பதிலளித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரிடையாக பதிலளிக்காமல், விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என்று கூறினார். விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் இசையமைத்து கொடுப்பேன் என்றும் யுவன் குறிப்பிட்டார். விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2024

மாதம் ₹4,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழுக்கு தொண்டாற்றிய முதியோர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் ₹4,000 (3,500 + ₹500 மருத்துவப்படி) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 58 வயது நிரம்பியோர் உரிய ஆவணங்களுடன், தமிழ் வளர்ச்சிதுறை அலுவலகத்தில் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.31.

News September 25, 2024

தமிழகத்தில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே ஆலை.. Foxconn திட்டம்

image

ஆப்பிளின் ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கு டிஸ்ப்ளே அசெம்பிளி தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க தைவானின் Foxconn நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரகடத்தில் 5 லட்சம் சதுர அடி நிலத்தில் ரூ.8,300 கோடியில் ஆலையை அமைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எப்போது அது அமைக்கப்படும் எனத் தகவல் இல்லை. விரைவில் சாத்தியமாக வாய்ப்பிருப்பதாக மட்டும் கூறப்படுகிறது.

News September 25, 2024

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக ஆடவர் ஜோடி

image

ஹாங்சோவ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் – விஜய்சுந்தர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் பிரான்ட்சென் – ஹென்ரிக் இணையுடன் இந்த இணை மோதியது. 1 மணி 49 நிமிடம் நடந்த போட்டியில் 4-6, 7-6, 10-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி பட்டம் வென்றது. ஜீவனுக்கு இது 2ஆவது சர்வதேச பட்டமாகும்.

News September 25, 2024

திரையரங்கு கட்டணங்களை உயர்த்த கோரிக்கை

image

திரையரங்குகளில் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும், 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் வசூல் பாதிப்பைத் தடுக்க பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரங்கள் கழித்து OTT-இல் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விலக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

News September 25, 2024

இலங்கை நாடாளுமன்றத்துக்கு நவ.14இல் தேர்தல்

image

இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க, நேற்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு நவம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதே மாதம் 21ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!