India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு, யாண்டும் இடும்பை இல.
* விளக்க உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
SHARE IT.
இஸ்ரேல் விமானம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 200 பாலஸ்தீனர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜெபலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் போர் விமானம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் முகாம் கட்டிடம் தரைமட்டம் ஆனது. இதனால் அங்கு இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200 பேரும் பலி ஆகி இருக்கலாம் (அ) படுகாயம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
போருக்கு தயாராகும்படி ராணுவத்துக்கு ஈரான் மதத் தலைவர் கோமெனி உத்தரவிட்டுள்ளார். ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி காெடுப்போம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. அப்படி பதிலடி கொடுத்தால் மீண்டும் தாக்குவோம் என ஈரான் மிரட்டி வருகிறது. அப்போது இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஈரான் ஏவக்கூடும் என்றும், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி, ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்துவர் எனக் கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் மொத்தம் 266 ரன்களையே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட விளாசவில்லை. நியூசிக்கு எதிரான முதல் டெஸ்டில் அடித்த 70 ரன்களே கடந்த 10 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ரன் ஆகும். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கோலி, இதுபோல் சொதப்புவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (அக். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ₹18,167 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 18ஆம் தேதியுடன் முடிந்த நிலவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அன்னிய செலாவணி கையிருப்பு ₹58 லட்சம் கோடியிலிருந்து, ₹57 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த செப். இறுதியில் அன்னிய செலாவணி கையிருப்பு ₹59 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்தது. அதன்பிறகு வீழ்ச்சியடைந்து வருகிறது.
* 1905 – நார்வே நாடு சுதந்திரம் பெற்றது.
*1947 – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
*1950 – கல்கத்தாவில் முதல் தொண்டு நிறுவனத்தை அன்னை தெரசா நிறுவினார்.
*1999 – ஆயுள் தண்டனைக்கான காலத்தை 14 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
1965: பாடகர் மனோ பிறந்தநாள்
1974: நடிகை ரவீனா டான்டன் பிறந்தநாள்
1985: நடிகை அசின் பிறந்தநாள்
1991: நடிகை அமலாபால் பிறந்தநாள்
தென்மாவட்டங்களில் இன்று காலை 4 மணி வரை மழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இன்று (அக். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடனும், நாளை முதல் 31ஆம் தேதி வரை லேசான மழையோ பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
Sorry, no posts matched your criteria.