news

News September 25, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14189211>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) 3.2 அடி 2) எட்வர்ட் ஜான்ஸ்டன் 3) Securities & Exchange Board of India 4)பாவோ கிறிஸ்டாடஸ் 5) ஐராவதம் மகாதேவன் 6) O ரத்த வகை 7) ஸ்டேமன்ஸ் & பிஸ்டில் இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 25, 2024

சித்தராமையா மீது வழக்குப்பதிய உத்தரவு

image

சித்தராமையாவுக்கு எதிரான நில ஒதுக்கீடு முறைகேடு குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிந்து விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி மனைவிக்கு நிலங்களை ஒதுக்கியதாக சித்தராமையா மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சினேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.

News September 25, 2024

மன்னிப்பு கேட்டார் கங்கனா

image

விவசாய சட்டம் குறித்த பேச்சுக்காக கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில், விவசாய சட்டத்தை மீண்டும் கொண்டுவர பிரதமரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கும்படி அவர் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், விவசாய சட்டத்தை ஏற்கெனவே பிரதமர் திரும்ப பெற்றதால் கட்சியின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு எனக் கூறிய அவர், தன் பேச்சை திரும்ப பெறுவதாகத் தெரிவித்துள்ளார்

News September 25, 2024

திண்டுக்கல் பால் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

image

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி பால் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது. நிபந்தனைகளை மீறி, நெய்யில் கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் பிரசாத லட்டுக்கு பயன்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாகவும், நெய்யை ஏ.ஆர். டெய்ரி விநியோகித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

News September 25, 2024

பிரபல யூடியூபர் மீது பாலியல் வழக்கு

image

ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக இருக்கும் ஹர்ஷா சாய் மீது ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டதுடன், அவரது நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி ₹2 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் தற்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 25, 2024

டாஸ்மாக்கில் QR-CODE மூலம் இனி மது விற்பனை?

image

டாஸ்மாக்கில் QR-CODE மூலம் மதுவிற்கும் திட்டம் ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 கடைகளில் சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக்கில் குவார்ட்டருக்கு கூடுதலாக ₹10 முதல், முழு பாட்டிலுக்கு ₹50 வரை பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காண QR-CODEஇல் ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனையில் பணம் செலுத்தி பில் வழங்க டாஸ்மாக் நடவடிக்கை எடுக்கிறது.

News September 25, 2024

இவற்றில் ஒன்று இருந்தாலும் பணம் கிடைக்காது!

image

EPF தொகை கிளைம் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற காரணம் தெரியாமலும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கானத் தகவல் தான் இது. ➤EPFO பதிவு & ஆதாருடன் UAN-ஐ இணைக்காதது ➤பெயர் & பிறந்த தேதி குளறுபடி ➤பணியில் சேர்ந்த & வெளியேறிய தேதி இல்லாமை ➤பிழையான உரிமைகோரல் விண்ணப்பம் ➤தவறான வங்கி கணக்கு விவரங்கள் ➤தகுதியற்ற EPS கணக்கு. இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றிருந்தால்கூட உங்களது EPF கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

News September 25, 2024

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி

image

கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷனில் ‘கைதி 2’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்தி. அடுத்த ஆண்டு (2025) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அப்படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது.

News September 25, 2024

BREAKING: 5 நாள்களுக்கு இடி-மின்னலுடன் மழை

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News September 25, 2024

கோட்சே போல பேசுகிறார் ஆளுநர்: அப்பாவு

image

ஆளுநர் ஆர்.என். ரவி கோட்சே போல பேசுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். மதசார்பின்மை ஐரோப்பாவில் தோன்றியது என்றும், ஆனால் பாரதம், இந்து மதம் ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாதென்றும் ஆளுநர் பேசியது குறித்து அப்பாவுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்ட 15,17 பிரிவை படித்து பார்த்தபிறகு பேச வேண்டும் என்றார்.

error: Content is protected !!