news

News September 25, 2024

காதல் கணவரை பிரியும் நடிகை ஊர்மிளா

image

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ படத்தில் நடித்தவர். அவருக்கும், தொழில் அதிபரான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்நிலையில், காதல் கணவரை பிரிய ஊர்மிளா முடிவெடுத்துள்ளார்.

News September 25, 2024

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவரா?

image

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நடைமுறை யதார்த்ததோடு சமூகத்தை அணுகுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் இருந்தாலும் முன்கோபத்தில் வார்த்தைகளை கொட்டித்தீர்த்து விடுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்து, தேசாந்திரியாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 25, 2024

ஒரு இன்னிங்ஸில் 498 ரன்கள்.. புது சாதனை

image

குஜராத் மாணவர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பள்ளிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், செயின்ட் சேவியர்ஸ் வீரர் துரோனா தேசாய் 320 பந்தில் 498 ரன்கள் விளாசினார். இதில் 86 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும். இதற்குமுன்பு, தானாவடே (1,009), பிருத்வி ஷா (546), ஹவிவல்லா (515), சமன்லால் (506), அர்மான் (498) ரன்கள் குவித்துள்ளனர்.

News September 25, 2024

பொய்களுக்கு எதிராக பூஜை செய்ய போகிறோம்!

image

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் வரும் 28ஆம் தேதி சிறப்பு பூஜை செய்யவுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள ஜெகன் மோகன், பொய்கள் மூலம் திருப்பதி கோயிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் பூஜைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

நம்பர் ஒன் பவுலர் அஸ்வின்!

image

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பவுலர் தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், ஜடேஜா 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தையும், அஸ்வின் 2ஆவது இடத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

News September 25, 2024

Health Tips: ரத்த அழுத்தம் என்னும் ‘சைலன்ட் கில்லர்’

image

குறை ரத்தத்தைக் காட்டிலும், உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. அறிகுறிகளை முன்கூட்டியே உணர முடியாததாலேயே HBP-ஐ ‘Silent Killer’ என மருத்துவர்கள் கூறுகின்றனர். கட்டுப்படுத்தாத HBP (120/80mmhg மேல்) இதய செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பல சிக்கல்களை உண்டாக்கலாம். 20 – 35 இளவயது மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி மயக்கம், நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

News September 25, 2024

டாப் 20 பேட்ஸ்மேன் பட்டியலில் 5 இந்தியர்கள்!

image

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டாப் 20 பட்டியலில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். ரிஷப் பண்ட் 6ஆவது இடத்தையும், ரோஹித் ஷர்மா 10ஆவது இடத்தையும், கோலி 12ஆவது இடத்தையும், ஷுப்மன் கில் 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News September 25, 2024

₹25,000 அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை

image

18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதை மீறி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால், பெற்றோருக்கு ₹25,000 அபராதம், வாகன உரிமம் ரத்து மற்றும் வழக்குப்பதிவு செய்து 3 மாத சிறைத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

News September 25, 2024

சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள்!

image

இந்தியாவில் இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஜெர்மனியில் 32 H ஆகவும், ரஷ்யாவில் 40 H ஆகவும் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஊடகம் மற்றும் ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு 56.5 H, அறிவியல், தொழில்நுட்ப துறையில் 53.2 H, ஆசிரியை 46 H பணியாற்றுகின்றனர். நீங்கள் எவ்வளவு நேரம் பணியாற்றுகிறீர்கள்?

News September 25, 2024

DRDOவில் வேலை.. உடனே APPLY

image

DRDOவில் 200 இடங்களுக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. GRADUATE அப்ரண்டிஸ், டெக்னிசியன் அப்ரண்டிஸ், டிரேடு அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வயது வரம்பு 2024 ஆகஸ்ட் 1 தேதிப்படி 18 ஆகியிருக்க வேண்டும். கல்வி தகுதி உள்ளிட்ட பிற விவரங்களை drdo.gov.in. தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!