India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட CM ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். Guidance TamilNadu பணியாளர்களின் சிறப்பான செயல்பாட்டினால், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட ₹10 லட்சம் கோடி முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேறியிருக்கிறது. மீதமுள்ள 40% பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், “50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே நமது இலக்கு” என அவர் எழுதி கையொப்பமிட்டார்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முருகனை தரிசனம் செய்ய ₹1000 வசூலிக்கப்படும் என்று காலையில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, கடவுளை தரிசனம் செய்ய பணம் கொடுக்க வேண்டுமா? என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதமாக மாறியது. இந்நிலையில், ₹1000 கட்டண அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 54.11% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் 79.95% வாக்குகள் பதிவாகின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 தொகுதிகளுக்கு இன்று 2ஆம் கட்டமாக அசம்பாவிதங்களின்றி தேர்தல் நடைபெற்றது.
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 30 முதல் அக். 13 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
நீண்ட தூரம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்ய உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட உள்ளது. 1,700 கி.மீ தூரம் என்ற அளவில் சோதனை மண்டலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை சீனா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், ஈரோடு 102, தூத்துக்குடி 101, கரூர் பரமத்தியில் 101, நெல்லையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும், சில பகுதிகளில் மழை பெய்தது.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, இளைஞர் சக்தி, உலக அளவில் அரசின் செல்வாக்கு போன்ற அளவீடுகளின்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின், பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளுக்கு வங்கிக் கணக்கு மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. கைதிகள் உறவினர்களுடன் மாதத்திற்கு 120 நிமிடம் வரை வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேச வழிவகை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பாடகர் SPB வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எஸ்பிபி-யின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவர் வாழ்ந்த வீதிக்கு SPB சாலை என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி. முடித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அக். 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ₹48,480 முதல் ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.