India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (செப். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*மேஷம் – நன்மை உண்டாகும் *ரிஷபம் – வீண் செலவு ஏற்படும் *மிதுனம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *கடகம் – போட்டி உண்டாகும் *சிம்மம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *கன்னி – தடங்கல் ஏற்படும் *துலாம் – அமைதியாக இருப்பது நல்லது *விருச்சிகம் – பொறுமையுடன் செயல்படுங்கள் *தனுசு – உறவினர்களின் அன்பு கிடைக்கும் *மகரம் – மகிழ்ச்சியான நாளாக அமையும் *கும்பம் – வெற்றி உண்டாகும் *மீனம் – இன்பம் பெருகும்.
தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். விரைவில் மூடப்படும் கடைகள் பட்டியல் வெளியிடப்படும் என் கூறிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில், கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால், மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொல்கத்தா பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் குளறுபடி நடந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மே.வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சூரிய மறைந்த பின் பிரேத பரிசோதனை நடந்ததாகவும், வழக்கத்தில் இல்லாத வகையில் 70 நிமிடங்களிலேயே பிரேத பரிசோதனையை முடித்துள்ளதாகவும் சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.
கொலை வழக்கில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல என்றார். சமீபகாலமாக என்கவுன்ட்டர் செய்வது போன்ற சூழல்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவதாகவும் விமர்சித்தார்.
IPL 18ஆவது சீசனில் 3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என 5 பேரை தக்கவைக்க IPL அணிகளுக்கு BCCI அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, கெய்க்வாட், ஜடேஜா, தோனி, துபே, பதிரனா, தீக்ஷனா, மிட்சல் ஆகிய 7 பேரில் 5 பேரை CSK தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர் பிளேவில் அபாரமாக செயல்பட்டு வந்த சஹார், பார்ம் அவுட்டில் இருப்பதால், தக்கவைக்க வாய்ப்பில்லை. இதில் உங்கள் சாய்ஸ் யார்?
ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள BCCI அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரோஹித், பும்ரா, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் தக்க வைப்பதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் BCCI சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் 5 முதல் 6 வீரர்களை தக்கவைக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் அவரின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான Pitchஐ ரோஹித் ஷர்மா ஆய்வு செய்தார். சென்னையில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.