news

News September 26, 2024

இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்..

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கான் அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும் என அந்த அணியின் ODI கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் என்றார். ஆனால் அவர் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியின் பெயரை குறிப்பிடவில்லை. இதற்கு பாக்., அணியின் சமீபகால ஃபார்மே காரணமாக செல்லப்படுகிறது.

News September 26, 2024

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

image

விக்கிரவாண்டியில் அக்.27 ஆம் தேதி நடைபெறும் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

News September 26, 2024

செப் 26: வரலாற்றில் இன்று

image

1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
1932 – மன்மோகன் சிங் பிறந்த தினம்
1954 – ஜப்பானில் தோயா மாரு சூறாவளியில் சிக்கி 1,172 பேர் உயிரிழந்தனர்.
1959 – வேரா சூறாவளி ஜப்பானை தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர்.
2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

News September 26, 2024

பெங்களூரு பெண் வழக்கில் திடீர் திருப்பம்

image

பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமி (29) என்ற பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ரேவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஒடிஷாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

News September 26, 2024

செல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

அதிக திரை நேரம் மற்றும் வெளியில் செலவிடும் நேரம் குறைவதால் குழந்தைகளின் கண்பார்வை மோசமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மூன்றில் ஒரு குழந்தைக்கு குறுகிய பார்வை மற்றும் தொலைதூர பொருட்களை தெளிவாக பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு செல்போனுக்கு பதிலாக செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

News September 26, 2024

விளாடிமிர் லெனினின் பொன்மொழிகள்

image

*ஒரு தலைமுறை இளைஞர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள், நான் இந்த முழு உலகையும் மாற்றுவேன். *எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, அதை நாமே வழிநடத்துவது தான்.
*தோல்வியை ஒப்புக்கொள்ள பயப்படாதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமாகச் செய்ததை இன்னும் முழுமையாகவும், இன்னும் கவனமாகவும், இன்னும் முறையாகவும் செய்யுங்கள்.

News September 26, 2024

’நந்தன்’ படத்திற்கு சிறப்பு கலை விருது!

image

’நந்தன்’ திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால் தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் படத்திற்கு வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்த்தியான திரைக்கதையின் வழியாக இயக்குநர் தெரிவித்துள்ளதாக பாராட்டிய அவர், இப்படம் இளம் தலைமுறையினரும் மாணவ, மாணவியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றார்.

News September 26, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 64 ▶ குறள்: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். ▶ பொருள்: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

News September 26, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ செப்.26 (புரட்டாசி 10) ▶வியாழன் ▶ நல்ல நேரம்: 10:45 – 11:45 AM ▶ கெளரி நேரம்: 10:45 – 11:45 AM & 6:30 – 7:30 PM ▶ ராகு காலம்: 1:30 – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: நவமி▶ பிறை: தேய்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ சந்திராஷ்டமம்: கேட்டை ▶ நட்சத்திரம் : திருவாதிரை அ.கா 4.11 வரை

News September 26, 2024

இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு

image

ஹங்கேரியில் நடைபெற்ற 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்த இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!