news

News September 26, 2024

13 ஆண்டு சாதனையை முறியடித்த ஹாரி புரூக்

image

AUS எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ENG கேப்டன் ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் சதமடித்து (110 ரன்கள்) எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 13 ஆண்டு கால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் (25 வயது 215 நாள்கள்) ODI-யில் சதமடித்த இளம் ENG கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றார். முன்னதாக, அலஸ்டர் குக் 26 வயது 190 நாள்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

News September 26, 2024

JOB ALERT: NTPC நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களை www.careers.ntpc.co.in இணையதளத்தில் காணலாம்.

News September 26, 2024

நில அபகரிப்பில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு: TN அரசு

image

போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களை அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க TN அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும், நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News September 26, 2024

விஜயதரணிக்கு NCW உறுப்பினர் பதவி?

image

விஜயதரணி தேர்தலுக்கு முன்பு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அப்போது MLA பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில், குஷ்புவின் ராஜினாமாவால் காலியான NCW உறுப்பினர் பதவி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News September 26, 2024

தீராத பிணிகள் தீர்க்கும் பாதாள லிங்கேஸ்வரர்!

image

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீக்க திருமால் வழிபட்ட திருத்தலம் ராணிப்பேட்டையை அடுத்த கரிவேடு அரிபிரசாதேஸ்வரர் திருக்கோயிலாகும். இங்குள்ள இறைவனுக்கு பல்லவன் திரிபுவன வீரகண்டன் கற்றளி கோயில் எடுப்பித்தாக ஸ்தல புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, பாதாள லிங்கேஸ்வருக்கு அபிஷேகம் செய்து, வில்வம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால் தீராத பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

News September 26, 2024

பஞ்சாப் & சிந்த் வங்கியில் வேலை.. Apply

image

மத்திய அரசின் பஞ்சாப் & சிந்த் வங்கியில் ஸ்பெஷல் ஆபீஸர் நிலையிலான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 42 பதவிகளில் காலியாக உள்ள 213 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை punjabandsindbank.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News September 26, 2024

புதியவர்களை நியமிக்காத கமல்

image

தேர்தலுக்கு முன்பு மநீமவில் இருந்து விலகியோருக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கமல் முடிவு செய்து விண்ணப்பம் கோரியிருந்தாராம். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை நியமிக்க போவதாகவும் கூறியிருந்தாராம். இதனால் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், பொதுக்குழுவில் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், ஏமாற்றம் அடைந்து, அவரை விமர்சிக்க தொடங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News September 26, 2024

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை

image

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News September 26, 2024

தொடரும் பணிச்சுமை மரணங்கள்..

image

சமீபத்தில் பணிச்சுமை காரணமாக கேரளவைச் சேர்ந்த இளம் பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த நிலையில், தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் சதப் பாத்திமா(45) என்ற பெண் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

News September 26, 2024

இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. 30 மற்றும் 1ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

error: Content is protected !!