news

News September 26, 2024

கருணாநிதிக்கு பாரத ரத்னா.. மோடியிடம் வலியுறுத்த திட்டம்

image

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க PM மோடியிடம் CM ஸ்டாலின் வலியுறுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வர், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க மோடியிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதுக்கும் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும், அதனை மத்திய அரசு ஏற்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

News September 26, 2024

துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

image

தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த SL கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியுள்ளனர். இதுவரை, மீனவர்களை கைது செய்துவந்த அவர்கள், தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 26, 2024

விரைவில் ₹8.36 லட்சம் கோடி FDI: மத்திய அரசு

image

விரைவில் ஆண்டுக்கு ₹8.36 லட்சம் கோடி அன்னிய நேரடி (FDI) முதலீட்டை இந்தியா பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உள்ளதால் FDI குவிந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா, தற்போது ஆண்டுக்கு ₹5.85 – ₹6.69 லட்சம் கோடி இந்தியாவுக்கு FDI கிடைப்பதாகக் கூறினார்.

News September 26, 2024

விளையாட்டு துளிகள்

image

➤தாய்லாந்து ஆடவர் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராமநாதன் – மட்சுய் ஜோடி முன்னேறியது. ➤U20 Asian Football: தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மங்கோலியாவை இந்திய அணி வீழ்த்தியது. ➤Macau ‘Super 300’ Badminton: முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனிலை வீழ்த்தினார். ➤இந்தியா – வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.

News September 26, 2024

புதிதாக 80,000 பேருக்கு ரேஷன் அட்டை

image

பொருள் வாங்க மட்டுமன்றி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் ரேஷன் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து புதிதாக அட்டை கோரி 2,89,591 பேர் மனு அளித்துள்ளனர். இதை பரிசீலித்து, தேர்தலுக்கு பிறகு 1.22 லட்சம் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 80,050 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 99,300 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 68,291 பேருக்கு விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News September 26, 2024

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

image

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அரசு முறை பயணமாக டெல்லி செல்கிறார். நாளை மாலை பிரதமரை சந்திக்கவிருக்கும் அவர் பள்ளிக் கல்வித்துறை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தவுள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது. மேலும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

News September 26, 2024

ஓபிஎஸ் அறிக்கை; எதிர்பார்க்காத அதிமுக

image

தனது ஆதரவாளர் வைத்திலிங்கம் மீதான வழக்குப்பதிவை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், இபிஎஸ் ஆதரவாளர் வேலுமணி மீதான வழக்குப்பதிவுக்கும் ஓபிஎஸ் கண்டனம் கூறியிருந்தார். இதை அதிமுகவினர் யாரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக இணைப்புக்காக ஓபிஎஸ் மிகவும் கீழ் இறங்கி வந்திருப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

News September 26, 2024

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும்:ADB

image

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25ஆம் நிதியாண்டில் 7%ஆக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்குமென கணித்ததை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதேபோல், 2025-26இல் இந்தியாவின் பாெருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும் ADB கூறியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு குறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News September 26, 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

image

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான வழக்கில் காலை 10.30க்கு தீர்ப்பு வெளியாகவுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவர், கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த SC ஜாமின் மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

News September 26, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கதேசத்தின் நீா்வளத் துறை முடிவு செய்துள்ளது. ➤இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தென் லெபனானில் இருந்து பெய்ரூட் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ➤இஸ்ரேலின் மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

error: Content is protected !!