India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணம் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா (ECI) பேராயருமான சற்குணம், உடல்நலக் குறைவால் செப்.22இல் காலமானார். வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு காவல்துறை நேற்று அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இன்று அக்கட்சி அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறது. சென்னையை அடுத்த பனையூரில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கவுள்ளார்.
வார இறுதிநாள் மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு வரும் வெள்ளியன்று 395 பேருந்துகளும், சனிக்கிழமை 345 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, ஓசூர், நாகை பகுதிகளுக்கு 140 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) தேனீ ஹம்மிங்பேர்ட் 2) Uniform Resource Locator 3) நிலக்கடலை (அ) வேர்க்கடலை 4) இறால் மீன் 5) குரோமோசோம் 6) ராபர்ட் ஓவன் 7) சோகர்னோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
1) உலகில் உள்ள பறவைகளில் மிகச்சிறியது எது? 2) URL என்பதன் விரிவாக்கம் என்ன? 3) மணிலா பயிர் என அழைக்கப்படும் பயிர் எது? 4)தலையில் இதயம் கொண்ட உயிரினம் எது? 5) பாரம்பரிய மரபியல் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மரபணு எது? 6) நவீன கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 7) இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
ஜம்மு – காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் 57.03% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில், அதிகபட்சமாக பூஜ் தொகுதியில் 73.80% வாக்குகள் பதிவாகின. தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின. அக்.2இல் 40 தொகுதிகளில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பெயரை வைத்ததற்கு CM ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், ஒப்பற்ற இசைக்கலைஞரும், தமது மூத்த சகோதரருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பெயரை அவர் வாழ்ந்த வீடு உள்ள தெருவுக்கு முதல்வர் வைத்துள்ளதாகவும், இதற்கு தமது பாராட்டுதல்களும், நன்றியதறிதல்களும் முதல்வருக்கு உரித்தாகட்டும் எனக் கூறியுள்ளார்.
மைத்ரேயன் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அவர் வழியில் முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனும் திமுகவுக்கு தாவக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள அவர், தாம் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி மாறப் போவதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி PM மெலோனியை காதலிப்பதாக வெளியான தகவலை மஸ்க் மறுத்துள்ளார். ரோம் குளோபல் சிட்டிசன் விருது விழாவில், 2 பேரும் காதல் பார்வை பார்ப்பது போன்ற படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மஸ்க் வெளியிட்ட பதிவில், மெலோனியுடன் ரொமாண்டிக் உறவில்லை எனக் கூறியுள்ளார். மஸ்க், மெலோனி ஏற்கெனவே விவாகரத்தானவர்கள். மஸ்க் 2 முறை மெலோனியைக் காண 2023இல் இத்தாலி சென்றது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 615ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், இதுவரை 2,000க்கும் மேற்பட்டாேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.