India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்தில் பாலாஜிக்கு SC ஜாமின் அளித்ததைத் தொடர்ந்து, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. சிறையிலேயே வைத்து உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். ஆனால், முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரரை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! எனத் தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹8 – ₹22 வரை உயர்ந்துள்ளது. சோயாபீன், சூரியகாந்தி, பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 13ம் தேதி உயர்த்தியது. இதையடுத்து கடந்த 2 வாரமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. விலையை அதிகரிக்க வேண்டாமென்ற அரசின் எச்சரிக்கையை ஆயில் நிறுவனங்கள் பொருட்படுத்தவில்லை. பாமாயில் ₹100ல் இருந்து ₹122ஆகவும், கடுகு எண்ணெய் ₹141ல் இருந்து ₹152ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சாதிய வன்முறை பகுதிகள் மதுரையிலேயே அதிகம் இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக சமூகநீதி மற்றும் மனித உரிமைத்துறை பதிலளித்துள்ளது. அதில் மதுரையில் 45 பகுதிகள், நெல்லையில் 29, திருச்சியில் 24, தஞ்சையில் 22, தேனியில் 20 பகுதிகள் சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
சாலைக்கு SPB பெயரை வைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு SPB மகன் சரண் நன்றி தெரிவித்துள்ளார். சாலைக்கு கோரிக்கை விடுத்த 36 மணி நேரத்தில் முதல்வர் பெயர் வைக்க ஆணையிட்டதாகவும், அதற்காக குடும்பத்தினர், ரசிகர்களின் சார்பாக நன்றி கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். SPB வசித்து வந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு நேற்று அவர் பெயர் சூட்டப்பட்டது.
<<14197768>>செந்தில் பாலாஜி<<>> மீண்டும் அமைச்சராக தடையில்லை என்று அவரது வக்கீல் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். E.D.ஆல் கைது செய்யப்பட்ட அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நிபந்தனை ஜாமினில் அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவரால் அமைச்சராக முடியுமா என்றக் கேள்விக்கு பதிலளித்த என்.ஆர். இளங்கோ, சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என பதிலளித்தார்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் ‘GOUT’ நோய்க்கான சிறந்த தீர்வினை முடக்கறுத்தான் வழங்கும் என நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. காலிகோஸின், குவர்செடின், அபிஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, உடல் சோர்வடைந்திருக்கும் போது ‘கிரீன் டீ’ போல இதனைப் பருக, உடனடியாக உற்சாகம் பிறக்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
<<14197768>>செந்தில் பாலாஜி<<>>க்கு ஜாமின் அளிக்கையில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்னென்ன? 1) தலா ₹25 லட்சம் என 2 நபர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் 2) வாரம் 2 முறை (திங்கள், வெள்ளி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் 3) சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்ளக் கூடாது 4) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதையொட்டி 471 நாள்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைதான அவர், கடந்த 15 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார். இதற்கிடையில், அவரின் நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது. ஜாமின் வழங்கப்பட்டதால் இன்று மாலை அல்லது நாளை அவர் சிறையில் இருந்து வெளியே வர அதிக வாய்ப்புள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவர், கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், SC இன்று அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. விசாரணை கைதியாக நீண்ட காலம் சிறையில் இருப்பது மற்றும் அடிப்படை உரிமை கீழ் SC இந்த உத்தரவை பிறப்பித்தது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ₹11,000 கோடிக்கு மட்டன், சிக்கன் பிரியாணி விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அசைவ பிரியர்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. இதனால் பிரியாணி கடைகளும் பலமடங்கு அதிகரித்துவிட்டன. இக்கடைகளில் தமிழகம் முழுவதும் ₹11,000 கோடிக்கும், சென்னையில் மட்டும் ₹5,500 கோடிக்கும் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. உங்களுக்கு எந்த பிரியாணி பிடிக்கும்? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
Sorry, no posts matched your criteria.