India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதித்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நமச்சிவாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தனிவார்டில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள் என்பதை INDIAகூட்டணித் தலைவர்கள் நிரூபித்திருப்பதாக காங்., எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து பேசிய அவர், “அநீதியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட INDIA கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றியடைந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
பூமியை இன்று ராட்சத எரிகல் நெருக்கமாக கடந்து செல்லவுள்ளது. 2024 SN என்ற எரிகல் விண்வெளியில் சுற்றி வருகிறது. அது இன்று பூமிக்கு அருகே 24,30,000 மைல் தொலைவுக்கு வரவுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு அடுத்தடுத்து பூமிக்கு அருகே எரிகல்கள் நெருக்கமாக சென்று வருகின்றன. அதனடிப்படையில் எரிகல் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தியாகம் செய்தா செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார் என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது, அவரை வரவேற்று ஸ்டாலின் பதிவிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்ததே திமுகதான் என்று கிண்டலடித்தார்.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் கருத்து சொல்ல முடியாது என்றார். ஆனால், SB அமைச்சராக எந்த தடையையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சராக SBக்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
பிரசவத்திற்குப் பின் தாய்மார்களின் மூளையில், 80%க்கும் அதிகமான Grey Matter சுருங்குவதாக கலிபோர்னியா பல்கலை. நரம்பியல் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லிஸ் க்ராஸ்டில் என்பவரிடம் கர்ப்பம் & பிரசவத்திற்குப் பிறகு செய்த MRI ஸ்கேனில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. ஆக்சன் சிக்னலிங்கை செயலாக்குவது, நியூரான்களை இணைப்பது, உடலியக்கம், நினைவாற்றல் ஆகிய செயல்களுக்கு Grey Matter பொறுப்பானது.
ஒருவருக்கு நஷ்டம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், கோவேறு கழுதை, எருமை, மாடு, பசு, நாய், பூனை, ஒட்டகம், குதிரை உள்ளிட்ட ஆநிரை & விலங்கு செல்வங்களை தனது செயலால் முடமாக்குவது (அ) அழிவு ஏற்படும் என தெரிந்தே தீங்கு விளைவிப்பது (அ) விஷம் வைத்து கொல்வது BNS சட்டப்பிரிவு 325இன் படி குற்றமாகும். இதற்கு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை (அ) அபராதம் (அ) இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விதித்த நிபந்தனைகளில் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் உதயநிதி துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் எலிமளவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி அகாடமியில் காலியாக உள்ள 240 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பைலட், நேவல் ஏர் ஆபரேஷன் ஆபீஸர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை www.joinindiannavy.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தவெக தலைவர் விஜய் திராவிட சாயத்தை பூசிக் கொண்டு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஆனால் பெரியாருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் அவர் சாடியுள்ளார். விஜய் பூசியுள்ள திராவிட சாயம் வெளுக்குமா அல்லது சாயத்தை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.