India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் நிகழ்வின்போது, 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் 15 மாவட்டங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடலின்போது இத்துயரங்கள் நிகழ்ந்துள்ளன. பலியானவர்களில் 37 குழந்தைகளும் அடக்கம். இத்துயர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அம்மாநில அரசு, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி உறுதியானவர் என ஸ்டாலின் பாராட்டுவது வேடிக்கையாக உள்ளதாக தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், எதிர்க்கட்சியில் இருந்தபோது துரோகியாக தெரிந்த SB, திமுகவில் சேர்ந்த பிறகு தியாகியாகிவிட்டாரா என வினவியுள்ளார். மேலும் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்துகொண்டு, எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என CM கூறுவதாகவும் சாடியுள்ளார்.
அவதூறு வழக்கில் சிவசேனா (உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கழிப்பிடம் கட்டுவதில் மராட்டிய பாஜக தலைவர் கிரித் சோமையா, மற்றும் அவரது மனைவி கிரித் மேத்தா ₹100 கோடி ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து கிரித் மேத்தா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதித்தது.
நவீன இயந்திரங்களை விட 1,000x வேகமான Zeta-Class சூப்பர் கம்ப்யூட்டரை ஜப்பான் உருவாக்கவுள்ளது. Fugaku Next எனப் பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்திற்கு $750 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட அந்நாடு திட்டமிட்டுள்ளது. 2030இல் இந்த கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வருமெனக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக அமெரிக்காவில் கூறப்பட்ட ஜப்பானின் Fugakuஇன் வாரிசாக இது கருதப்படுகிறது.
‘வேட்டையன்’ படத்தில் அமிதாப்பின் AI குரல் பயன்படுத்தப்படவுள்ளது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் ‘சத்யதேவ்’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வீடியோவில் அவரின் குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியதால் AI மூலம் அமிதாப்பின் குரல் பதிவு செய்யப்பட்டு, அக்.10இல் படம் வெளிவரவுள்ளது.
இன்று மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற அறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என RMC குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே பதிவிடுங்கள்.
PAK-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ENG அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது குறித்து ECB தகவல் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “தி 100 மென்ஸ் தொடரின்போது, (6 வாரம் முன்பு) பென்னுக்கு காயம் ஏற்பட்டது. ஓய்வில் இருந்த அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளது. ஸ்கேன் உள்ளிட்டவற்றிலும் நல்ல முடிவுகள் வந்துள்ளன. இப்போது, பாக்., தொடருக்கு அவர் ஆயத்தமாகி வருகிறார்” எனக் கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகளை முடக்க BJP எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு செந்தில் பாலாஜி கைது சிறந்த உதாரணம் என சிபிஐ கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் விரைந்து களப்பணியாற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கி, அவர்களை அரசியல் ரீதியாக பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதை பாஜக ஒரு உத்தியாக வைத்திருப்பதாகவும் விமர்சித்துள்ளது. SC தீர்ப்பு பொய் வழக்கு போடும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணி என்றும் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததால், SB அமர்வு நீதிமன்றத்தில் இன்று காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் SBக்கு SC ஜாமின் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணம் இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து காவல் நீட்டிப்பு நிறுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.