India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உரிமக் கட்டணத்தை 8% குறைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை அரசு ஏற்கும்பட்சத்தில், ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியுள்ளார். இது கூட்டணி ஆட்சி என முழக்கும் விசிகவுக்கான க்ரீன் சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை இழந்து அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் கட்சிகளுக்கான கொக்கியாகவும் கருதலாம். இதில் சிறு கட்சிகள் அவருடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய ரத்த நாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. செரிமானப் பாதையில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. புரோபயாடிக்ஸ் இருப்பதால் செரிமானத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது என்கின்றனர்.
மாநாடு வெற்றி போல் அரசியல் களத்திலும் விஜய் வெற்றியடைய ADMK கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், VCK MP ரவிக்குமார், ஆதவ் அர்ஜுனா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தவெக மாநாட்டில் பங்கேற்க தன்னெழுச்சியாக ஏராளமான கூட்டம் விக்கிரவாண்டியில் குவிந்தது. ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் கூடிய இந்த கூட்டம் ஒட்டுமொத்தமாக விஜய்க்காக கூடிய கூட்டம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதே நேரம், அவர்களுக்காக உணவும், குடிநீரும் கூட முறையாக வழங்க முடியாமல் தவெக நிர்வாகிகள் சொதப்பியுள்ளனர். ஆனால், எவ்வித சொதப்பலும் இல்லாமல் திட்டமிட்டபடி தனது உரையை சிறப்பாக வழங்கினார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் இதுவரை இல்லாத வகையில் மேடையில் அனல் பறக்க பேசியிருந்தார். அதில், சினிமா மூலம் தனக்கு வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்குமா என்று யோசித்து முடிவு எடுத்துதான் அரசியலுக்கு வந்ததாக கூறியிருந்தார். இது, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த ரஜினியை அவர் மறைமுகமாக சாடும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தவெக மாநில மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே நிர்வாகிகள் சென்ற கார் கவிழ்ந்ததில் திருச்சி இளைஞரணி மாவட்டத் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் கலை ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இளைஞர் வசந்த் விபத்தில் பலியானார். சென்னையைச் சேர்ந்த சார்லஸ் மாநாட்டு திடலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
“அவர்களே… இவர்களே…” என பழைய டெம்பிளேட்களை பயன்படுத்த விரும்பவில்லை என விஜய் கூறியுள்ளார். துண்டு, மாலை அணிவிப்பது குறித்தும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் அவருக்கு வெள்ளியாலான வீரவாள் வழங்கப்பட்டது. இதுவும் பழைய டெம்பிளேட்தான் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், கட்சிக்காக உழைப்பவர்களின் பெயரை தலைவன் மேடையில் உச்சரிப்பது அவனுக்கான அங்கீகாரம் என்கின்றனர்.
தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக மக்களின் பல்ஸை விஜய் உணர்ந்து இருப்பது அவரது உரையில் வெளிப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. எனினும், தவெகவின் வெற்றி ஒருவிரல் புரட்சியில்தான் உள்ளது.
சிவகாசியில் கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை 20% சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை சில்லறை விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால், இம்முறை பெரிதாக கூட்டம் இல்லை என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.